கிள்ளான் பள்ளத்தாக்கில் சனிக்கிழமை பகலிலும் நேற்றுக் காலையிலும் பெய்த மழை செயற்கையாக பெய்விக்கப்பட்ட மழை அல்ல. வடகிழக்கு பருவகாற்று முடிவுக்கு வருவதைக் குறிக்கும் மழை அது.
“வடகிழக்கு பருவக்காற்று முடிவுக்கு வரும்போது கிழக்கிலிருந்து வீசும் காற்று மழையைக் கொண்டு வருவதுண்டு”,என மலேசிய வானிலை ஆய்வுத்துறையின் காற்றுமண்டல, செயற்கை மழை பெய்விக்கும் பிரிவின் இயக்குனர் அஸ்ஹார் இஷாக் கூறினார்.
ஆனாலும், வானிலை துறை வாரத்துக்கொரு தடவை மேக விதைப்பு முறையின்வழி செயற்கை மழை பெய்விக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
நீர்பிடிப்புப் பகுதியில் நீரின் அளவைக் கூட்டுவதும் புகைமூட்டத்தைக் குறைப்பதுவும் அதன் நோக்கமாகும்.
ஷபாஸ்மலேசியா!