எம்எச்370 விமானத்தில் பயணித்த இரு ஈரானியர்கள், ஈரானிய கடப்பிதழ்களை வைத்து மலேசியாவுக்குள் வந்தார்கள் என்று இண்டர்போல் கூறியதை மறுப்பதுபோல் அவர்கள் திருடுபோன கடப்பிதழ்களைக் கொண்டுதான் மலேசியா வந்தனர் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
அவ்விருவரும் காத்தாரிலிருந்து தாய்லாந்தின் புக்கெட்வரை சொந்த நாட்டுக் கடப்பிதழ்களைப் பயன்படுத்தி விட்டு அங்கு ஆஸ்திரியா மற்றும் இத்தாலி நாட்டுக் கடப்பிதழ்களை வாங்கியுள்ளனர் என்று ஜாஹிட் குறிப்பிட்டார்..
இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது அவர் இவ்வாறு கூறினார்.
இதட்கு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள் உலகமே எதிர் பார்க்கும் இதுவும் ஒரு முக்கியமான விசயம்தான் .
பல நாட்களாய் இந்த தகவலை கேட்கிறோம்.நன்று,?அதற்கு நீர் எடுத்த நடவடிக்கையில் ஒன்றை சொல்லுமே ,அதைக் கேட்போம்.முதலாவது இதை கண்டு பிடிப்பதைக் கோட்டை விட்டீர் ,பிறகு ராடாரில் பதிவானதை தடுக்காமல் கோட்டை விட்டீர் .அடுத்தது என்ன?
9/11 அமெரிக்க தாக்குதலில் KLIA தீவிரவாதிகளின் TRANSIT வழி தடமாக இருந்தததாக என்றொரு செய்தி அப்போது பரவியது.
ஆனால் இப்போது திருடுபோன கடப்பிதழ்களைக் கொண்டுதான்
மலேசியா வந்தனர் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறுவது, இன்றளவும் KLIA தீவிரவாதிகளின் TRANSIT வழி
தடமாகத்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்கிறது.