மலேசியா எம்எச்370-ஐ இடைமறிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது

interxஒரு நாட்டுக்குள்  அடையாளம்  தெரியாத  ஒரு  விமானம்  பறந்து  சென்றால்  போர்  விமானங்கள்  உடனே  புறப்பட்டுச்  சென்று  இடைமறிக்கும்.  எல்லா  நாடுகளிலும்  இதுதான்  நடக்கும். ஆனால்,  மலேசியாவில்  அது  நடக்கவில்லை.
எம்எச்370  தாய்லாந்து  குடாகடலுக்கு  உயரே  அப்படியே  திரும்பி  மேற்கு  நோக்கிப்  பறந்தது.  ஆனால், மலேசிய  ஆயுதப்படை  அதைக்  கண்டுகொள்ளவில்லை  என  நியு  யோர்க்  டைமஸ்  கூறியது.

“நாட்டின்  மேற்குக்  கரையில்  மலேசிய  ஆகாயப்படையின்  அமெரிக்காவில்  தயாரிக்கப்பட்ட  எப்-18, எப்-5  ஜெட்   போர்  விமானங்கள்  வானத்தை  நோக்கிப்  பறந்து  செல்ல  ஆயத்தமாக  இருந்தன.  கட்டுப்பாட்டு  அறையில்  நால்வரடங்கிய  ரேடார்  குழு  வானத்தில்  அதிகாலையில்  விமானம்  ஒன்று பறந்து செல்வதைப்  பார்த்தது.  ஆனால்,  பார்த்தபின்பு  எந்த  நடவடிக்கையும்  எடுக்கவில்லை”, என  அச்செய்தி  கூறிற்று.

இதனால்  எம்எச்370  விமானத்தை  இடைமறிக்கும்  ஒரு நல்ல  வாய்ப்புத்  தவற   விடப்பட்டது  என  அந்நாளேடு  கூறியது.