தீர விசாரிக்காமல் எம்எச்370 விமானி கேப்டன் ஸஹாரி அஹமட்மீது பழி சுமத்தக்கூடாது என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஊடகங்களையும் அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஸஹாரி ஒரு “நல்ல குடும்பஸ்தர்” என்றாரவர்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய அன்வார், ஸஹாரி தம் மைத்துனியின் உறவினர் என்பதை ஒப்புக்கொண்டார். 1981-இலிருந்து எம்ஏஎஸ்-ஸில் வேலை செய்யும் அவரைப் பல பிகேஆர் நிகழ்வுகளில் சந்தித்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
“நீதியின்மீது மிகவும் விருப்பம் கொண்டவர் அவர்”, என அன்வார் கூறினார்.
குதப்புணர்ச்சி வழக்கில் தமக்கெதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பைக் கண்டிக்கும் வகையில்தான் ஸஹாரி எம்எச்370-ஐக் கடத்திச் சென்றார் என்று கூறப்படுவதைக் கேலி செய்தார் அன்வார்.
“டெக்சி ஓட்டுனர்களில் 90 விழுக்காட்டினர் எங்கள் ஆதரவாளர்கள்தான். அதற்காக எல்லாரும் டெக்சிகளை காஜாங்குக்குக் கடத்திச் செல்லவில்லையே”, என்றாரவர்.
MAS விமானிகள் 80% எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் என்று மலேசியே நாளிதழ் தகவல். அப்படியானால் 80 விமானம் அல்லவா கடத்த பட்டிருக்க வேண்டும் ???
என்ன இப்படி குழப்பரானுங்க..! அரசியலின் எதிர்கட்சியின் சதியா , இல்ல தீவிரவாதியின் செயலா..? யாருக்கு யார் உறவினர்களாக இருந்தால் என்ன , தயவு செய்து அந்த அப்பாவி 239 பயணிகளுடைய உயிருடன் விளையாட வேண்டாமே ..!
மாஸ் போன்ற நிறுவனங்களில் எல்லா இனங்களுக்கும் சரியான வாய்ப்பு வழங்கினால் இதுபோன்ற அசம்பாவிதம் நடக்குமா . குடிநுழைவு ,சுங்கத்துறை, விமானி , துணை விமானி ,எல்லா இனமும் கலந்து பணிசெய்தால் சேவை சிறப்பாக இருக்கும் . அதுமட்டும் இல்லாமல் வேலைதொடர்பான விஷயங்களை பரிமாறிக்கொள்ளலாம் . அங்கே இன ஆதிக்கம் இருக்காது . திறமையான மலேசியர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால்தான் என்ன .எல்லா இனத்திலும் திறமைசாலிகள் இருக்கிறார்கள் இது எனது வேண்டுகோள் .
MAS விமானிகள் 80% எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ,,அதனால்தான் இந்த அம்நோகாரர்கள் இந்த விமாதை கடத்தி அன்வார் மீது பலி போட செய்த ஒரு சதி !!,,நம்பவில்லை என்றால் ,பாருங்களேன் இந்த விமானம் 22/03/2014 கஜாங் தேர்தலுக்கு முன்பே வந்து KLIA விமான நிலத்தில் தரையிறங்கும் !!!! ஆமம் ,,,WAIT N SEE ,,THE UMNO கேம்!!!
அருமையாக
சொன்னார் அதுவும்
உண்மையாக 90 விழுகடினர் ஆதரவு உண்டு. காரணம் நான் விசாரிததில் டேக்சி ஒடுனர் முழு ஆதரவு உண்மையே.