பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஐந்து மாதங்களில் கவிழ்க்கப்படுவார் என்று ட்விட்டரில் செய்தி போட்டிருந்த பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா தேச நிந்தனைக் குற்றம் புரிந்திருக்கிறாரா என்று போலீசார் விசாரணை செய்கிறார்கள்.
இதன் தொடர்பில் இன்று அவரிடம் கோலாலும்பூர் போலீஸ் தலைமையகத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
பத்து எம்பியான தியான் சுவா, மார்ச் 7-இல், முறையீட்டு நீதிமன்றத்தில் அன்வாருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து ட்விட்டரில் செய்தி ஒன்றைப் பதிவு செய்திருந்தார்.
“நஜிப் அன்வாருக்கு 5-ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்தார்- ஐந்தே மாதங்களில் நஜிப்பை மக்கள் கவிழ்ப்பார்கள். இது நடக்கும் என்று உறுதி கூறுகிறேன்”, என ட்விட்டரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆத்திரத்தில் சொன்னாரா இல்லை ஒரு ஆதங்கத்தில் சொன்னாரானு தெரியல. இப்ப இவன பிடித்து BN காரனுங்க கொடைய கொடைய கொடைய போறானுங்க .. எது எந்த இடத்தில் எப்படி பேசணும்னு யோசித்து பேசணும் ..இவனுக்கு இது தேவையா..? BN காரனுக்கு அல்வா கடைச்ச மாதிரிதான் ..
உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமே கூட கைக்கு வந்துவிடும்.குறல் 484,அதிகாரம் காலமறிதல்.நாராயண சமர்பணம்.
‘5 மாதங்களில் நஜிப் கவிழ்க்கப்படுவார்’ நான் சொல்லுகிறேன் ,,இன்னும் இரெண்டே மாதத்தில் துண்ட காணாம் துணிய காணாம் என்று நஜிப் ஓட போறான் ,,தியான் சுவா சொன்னது சரிதான் ,சில மூதேவிகளுக்கு தெரியவில்லை ,,,,,,,
சொன்னது சரியில்லை தான்! ஆனால் கவிழ்க்கப்படுவார் என்பதற்காக விசாரணை என்பது தேவை இல்லை!