அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் நாளிலிருந்து பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) அமலுக்கு வரும்போது சுமார் 15,542 உணவகங்களில் அந்த வரி வசூலிக்கப்படலாம்.
ஆண்டுக்கு ரிம500,000 விற்பனையைக் கொண்ட உணவகங்கள் இந்த வரியை வசூலித்தாக வேண்டும் என நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அஹ்மட், ஆறு விழுக்காடு ஜிஎஸ்டி அமலுக்கு வருவதால் உணவு விலை கிடுகிடுவென்று உயரும் என்று நினைக்க வேண்டாம் என்றார்.
“விலைகள் ஆறு விழுக்காடு உயரும் என்று நினைப்பது சரியல்ல. ஒரு விழுக்காடுதான் உயரும் ஏனென்றால், இப்போதே சேவை வரி 5 விழுக்காடு வசூலிக்கப்படுகிறது”, என்றார்.
ஜிஎஸ்டி மூலம் அடுத்த ஆண்டில் ரிம3.87 பில்லியன் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று அரசாங்கம் எண்ணுகிறது.
அரசியல் ஆதாயத்துக்காக மக்கள் பணத்தை கொள்ளையடித்து மறுபடியும் கஜானாவை நிவர்த்தி செய்ய மேற்கொள்ளும் சேவை வரிதான் இந்த ஜி எஸ் டியோ??? அல்லது, 13வது பொதுத்தேர்தலின் போது வாரியிறைத்த மக்களின் பணத்தை ஈடுகட்டவோ இந்த மாற்று வரி????? மக்கள் வயிறு நிறைகிறதோ இல்லையோ, ஆளும் கட்சியினரின் தொப்பை மட்டும் பெருப்பது நிச்சயம்….
நைனா இனிமே நாம வாரோங்கடையில் மட்டுமே
சாப்பிடுவோம் அங்கே gst கிடையாது ,ரசீதும் கிடையாது
அவனுங்க வருமான வரியையும் கட்டுவது கிடையாது .
எனக்கு ஒரு பெரியவா் சொன்னாா்,வேலைக்கு வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு போவாராம்,காரணம் சொல்ரார்,அப்போது தான் வீட்டில் குடும்பத்தில் என்ன சாப்பிடுராங்க தெரியுமாம்.வீட்டில் எப்போவாவது விருந்து ஆனால் நமக்கு தினமும் விருந்து,நாராயண நாராயண.
முதல் சொத்து மங்கிள் அப்பரம் சொத்து பானையில்