‘புதிய எம்பி தேவையில்லை’: காஜாங் வாக்காளர் பலரின் கருத்து

by electகாஜாங்கில் யுனிவர்சிடி  சிலாங்கூர் (யுனிசெல்)  மேற்கொண்ட  கருத்துக்கணிப்பில்  கலந்துகொண்டவர்களில்  63  விழுக்காட்டினர்  சிலாங்கூர்  மந்திரி  புசாரை  மாற்ற  வேண்டிய  அவசியமில்லை  என  நினைக்கிறார்கள்.

யுனிசெல்,  சிலாங்கூர்  அரசாங்கத்துக்குச்  சொந்தமான  ஒரு பல்கலைக்கழகம்.

கருத்துக்கணிப்பில்  394 வாக்காளர்கள்  கலந்துகொண்டதாக  மூத்த  விரிவுரையாளர்  முகம்மட் ஷம்ஷினோர்  அப்துல்  அசீஸ்  கூறினார். அவர்களில்  37  விழுக்காட்டினர்  மட்டுமே  அப்துல்  காலிட்  இப்ராகிமுக்குப்  பதிலாக  இன்னொருவர்  அப்பதவிக்கு  வருவதை  ஆதரிக்கிறார்கள்.

69.1  விழுக்காட்டினர்  காலிட் “ஒரு  நல்ல  தலைவர்” என்று  நினைக்கிறார்கள். இது  அன்வார்  இப்ராகிமுக்குக்  கிடைத்த (66.2 விழுக்காடு)  ஆதரவைவிட  அதிகமாகும்.

கருத்துக்கணிப்பில்  கலந்துகொண்டவர்களில்  பாதிப்பேர்  இந்த  இடைத்  தேர்தலே  தேவையற்றது  என்றும்  சொன்னார்கள்.