எம்எச்370 காணாமல்போனது பற்றி அதிகாரப்பூர்வமான விளக்கமளிப்பு தேவை என்று பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் கேட்டுக்கொண்டால் விளக்கமளிக்க ஆயத்தமாக இருப்பதாய்க் கூறுகிறார் இடைக்கால போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் உசேன்.
நேற்று பிஎன் எம்பிகளுக்கு விளக்கமளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹிஷாம், பிஎன் எம்பிகள் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக்கொண்டார்கள் அதனால்தான் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது என்றார்.
“அவர்களுக்கும்(பக்காத்தான்) விளக்கமளிக்கப்படும், அவர்கள் கேட்டுக்கொண்டால். அவர்களின் எதிர்பார்ப்பு எங்களுக்கு என்ன தெரியும்?”, என்றவர் சொன்னார்.
இதற்குமுன் பக்காத்தான் எம்பிகள் தாங்கள் விளக்கமளிப்புக்கு அழைக்கப்படாததைக் கண்டித்திருந்தனர்.
முதல்ல காணமல் போன விமானத்துக்கு விளக்கம் அளித்தால் போதும் .இதுக்கே விழி பிதுங்கி நிக்கர???
முதல் நாள் பத்திரிக்கை செய்தியாளர்களிடம் கூறியதை 12 நாட்கள் தொடர்ச்சியாக கூறி உங்களையும் உலகத்தினரையும் ஏமாற்றும் என்னை போன்ற அமைச்சர் இந்த உலகில் உண்டா ??? என்று கூறி பக்காத்தான் ரக்யாட் எம்பிக்கள் தலையை சொரிந்து கொள்ளும் அளவுக்கு நகைச்சுவை செய்ய போகிறார் என்று நினைக்கிறன்.
“பாலியல் வல்லுறவு” காரணமாக MH 370 கடத்தப்பட்டிருக்கலாம் என்று நாடாளுமன்ற வளாகத்தில் பேச படுவதாக, ஆக கடைசி தகவல்.
புகை மூட்டத்தில் காணமல் போன பலனிவெலை, வேல் பாரி தேடி அலைகிறார் அப்படியெ அவருக்கும் ஒரு பேட்டி