மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானம் 239 பேருடன் காணாமல்போனதைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் அது இந்தியப் பெருங்கடலின் தென்பகுதி நோக்கிப் பறந்து சென்றிருக்கலாம் என்று நினைப்பதாக விசாரணைத் தரப்புக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் தெரிவித்தது.
முன் எப்போதுமில்லாத வகையில், 27 நாடுகள், கேஸ்பியன் கடலிலிருந்து லாவோஸ் வரையிலும், தெற்கே இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியிலிருந்து மேற்கு ஆஸ்திரேலியா வரையிலும் காணாமல்போன விமானத்தை வலை வீசி தேடி வருகின்றன. ஆனால், பலனில்லை.
“அது தெற்கு நோக்கிச் சென்றிருக்கலாம், அதுவும் தெற்குப் பெருவெளியில் கடைசிப் பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது”, என அவ்வட்டாரம் கூறிற்று.
வடக்குப் பெருவெளியில் உள்ள நாடுகள் விமானம் தங்கள் வான்வெளிக்குள் வரவில்லை என்று கூறியிருப்பதாலும் தெற்குப் பெருவெளியின் மேல் பகுதியில் உடைந்த பகுதிகள் எதுவும் காணப்படாததாலும் இந்த அனுமானத்துக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
எதுவும் நடக்கலாம்.
விமானம் காணாமல் போன போதே அதைப்பற்றி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அத்துடன் விமானபடையின் ராடார் காண்பித்த அடையாளம் தெரியாத விமானத்தை பற்றி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்விமானம் எதரியின் விமானமாக இருந்திருந்தால்?>>>>>>>>>>>>> இதிலிருந்து புரியவேண்டும் இந்நாட்டின் தற்காப்பு என்ன நிலையில் இருக்கின்றது என்று.இதில் ஆச்சரியப்படுவதர்க்கு ஒன்றுமில்லை.இதுதான் இப்போதைய ஆட்சியின் தரம்
மலேசியா அரசாங்கம் ஒரு விஷயதை மட்டும்தான் ராடார் விட்டு கண்டுபிடிப்பார்கள் அன்வர் … மட்டும்தாம் மலேசியா அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியுமாம்