செய்தியாளர்கள்: பயணிகளின் உறவினர்கள் எங்களுடன் பேசக்கூடாதா?

chineseநேற்று  நடந்த  ஒரு  நிகழ்வால்  மலேசிய  அரசாங்கம்  மீண்டும்  பன்னாட்டு  ஊடகங்களின்  குறைகூறலுக்கு  இலக்கானது.

வழக்கம்போல்  அன்றாட  செய்தியாளர்  கூட்டம்  நேற்றும்  நடந்தது. அப்போது  காணாமல்போன  விமானப்  பயணிகளின்  உறவினர்கள்  செய்தியாளர்களுடன்  பேச  முனைந்தனர். அதை  மலேசிய  அதிகாரிகள்  அனுமதிக்கவில்லை. இது  ஏனென்று  வெளிநாட்டுச்  செய்தியாளர்களுக்குப்  புரியவில்லை.

அதிகாரிகள்  அவர்களைப்  பேசவிடாமல்  தடுத்திருக்கக்கூடாது  என்று  டென்மார்க் டிவி2-இன்  செய்தியாளர்  பெஞ்சமின்  குர்ஸ்டைன்  கூறினார்.

“அவர்கள்  பாவம்  வெறுப்படைந்து  போயிருக்கிறார்கள். அதை  வெளிப்படுத்திக்கொள்ளத்தான்  வந்தார்கள்……ஆனால்,  அவர்கள்  அங்கிருந்து  அப்புறப்படுத்தப்பட்டனர்.

“அவர்களைப்  பாதுகாக்க  அப்படிச் செய்திருந்தாலும்  அல்லது  பேசவிடாமல்  தடுப்பதற்காக அப்படிச் செய்திருந்தாலும்  மலேசியாவுக்குத்தான்  கெட்ட  பெயர்”,  என  குர்ஸ்டைன்  மலேசியாகினியிடம்  நேற்றுத்  தெரிவித்தார்.

“அந்நிலவரத்தை  எப்படிக்  கையாண்டிருக்க  வேண்டும்  என்று  சொல்லும்  தகுதி  எனக்கு  இல்லை.  ஆனால்,  புத்திசாலித்தனமாகக்  கையாளவில்லை  என்பது  மட்டும்  உறுதி”,  என்றாரவர்.