அமைச்சு: அன்வார் ஜப்பான் செல்ல உதவினோம்

anwar japanவெளியுறவு  அமைச்சு  மேற்கொண்ட  விடாமுயற்சியின்  காரணமாகத்தான்  அன்வார்  இப்ராகிம்,  பிப்ரவரி  26ஆம்  நாள்  எந்தப்  பிரச்னையுமின்றி ஜப்பானுக்குச்  சென்று  உரையாற்றித்  திரும்பிவர  முடிந்தது  என  வெளியுறவு  துணை  அமைச்சர்  ஹம்சா  சைனுதின்  கூறினார்.

மக்களவையில்  ஷம்சுல்  அகின் (பிகேஆர்- புக்கிட்  கட்டில்) கேட்டிருந்த  கெள்விக்குப்  பதிலளித்த  ஹம்சா, அமைச்சு  ஜப்பானிய  தூதரகத்துடன் தொடர்ந்து  தொடர்புகொண்டு  அன்வார்  பிரச்னையில்லாமல்  ஜப்பான்  சென்றுவர  ஏற்பாடுகளைச்  செய்து மொடுத்தது  என்றார்.

அதற்குமுன்  ஜனவரி  19-இல்,  அன்வார்  ஜப்பானுக்குச்  செல்ல  முற்பட்டபோது  தடுத்து  நிறுத்தப்பட்டார்.

“அன்வார்  மிகப்  பெரிய எதிரணித்  தலைவர்  என்பது  எங்களுக்குத்  தெரியும். ஜப்பானில்  பேசும்போது  நாட்டின் பெயரைப்  பாதுகாக்கும்  வகையில்  நாட்டை உயர்த்திப்  பேசுவார்  என்பதும்  எங்களுக்குத் தெரியும்”,  என்று  நக்கலாகக்  குறிப்பிட்டார்  ஹம்சா.