குலசேகரன்: ஜுனாய்டி, மன்னிப்பு கேள், இல்லையேல் நடவடிக்கை

 

Junaidi-Rapeவான் ஜுனாய்டி வான் ஜாப்பார் என்ற ஒரு கீழ்த்தரனமான துணை உள்துறை அமைச்சர் சட்டரீதியான பாலியல் வன்முறை குறித்து போலீஸ் புகார் செய்யப்படுவது பற்றி தெரிவித்திருந்த கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று ஈப்போ பாரத் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் என்று கேட்டுக்கொண்டார்.

அந்த வான் ஜுனாய்டி மன்னிப்பு கோருவதற்கு நாளை வரையில் கால அவகாசம் கொடுப்பதாக கூறிய குலசேகரன், அவர் மன்னிப்பு கோராவிட்டால் அவரை நாடாளுமன்ற உரிமை மற்றும் சலுகைகள் குழுவின்முன் நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் மலாய்க்காரர் அல்லாதவர்கள் சட்டரீதியான பாலியல் வன்முறையில் அதிகப்படியாக உணர்ச்சி வசப்படுவதில்லை என்று கூறியிருந்தார்.

அந்த ஜுனாய்டி அப்படி ஓர் அவமதிப்பான மற்றும் உறுதிப்படுத்தப்படாத பதில் அளிப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. அந்த ஜுனாய்டிக்குkula இருக்கும் ஒரே வழி அவர் கூறியதை திரும்பப் பெற்றுக்கொண்டு மன்னிப்பு கோருவதாகும் என்று குலசேகரன் மேலும் கூறினார்.

காப்பார் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. மணிவண்ணன், அந்த ஜுனாய்டி அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றார்.

“அவரின் அறிக்கை மற்ற இனத்தவரை மட்டும் அவமானப்படுத்தவில்லை; அது இஸ்லாமியர்களையும் அவமானப்படுத்தியுள்ளது”, என்றார் மணிவண்ணன்.

இதர ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாயில் கொழுக்கட்டை அடைத்திருப்பதாகத் தெரிகிறது.