பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) பற்றி மலேசிய, சீனர் வணிக, தொழிலியல் சங்கக் கூட்டமைப்பு (ஏசிசிஐஎம்) மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் கிட்டதட்ட பாதிப்பேர் ஜிஎஸ்டி எப்படிச் செயல்படும் என்பதை அறியாதவர்களாக இருப்பது தெரிய வந்தது.
345 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 47 விழுக்காட்டினர் ஜிஎஸ்டி செயல்படும் விதம் புரிபடவில்லை என்றனர்.
இவ்வாண்டு முற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 86 விழுக்காட்டினர் ஆறு விழுக்காடு ஜிஎஸ்டி விகிதம் அதிகம் என்று நினைக்கிறார்கள். தொடக்க விகிதம் மூன்று விழுக்காடாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது 41 விழுக்காட்டினரின் கருத்து.
GST மக்களை எங்கு கொண்டு செல்லப் போகிறது என்பது இன்னும் புரியாத புதிர்தான். இவங்களை நம்பி 56 வருடம் என்ன நடத்ன்தது என்று நமக்கு தெரியும்.