-அண.பாக்கியநாதன், மார்ச் 22, 2014
மலேசிய வரலாற்றில் இந்திய சமுதாயத்தை ஏமாற்ற எத்தனையோ டத்தோகளையும், பேராசிரியர்களையும், முனைவர்களையும் முன்நிறுத்தி பாரிசான் நடத்திய நாடகங்களுக்கு அளவே இல்லை. படித்தவர்கள், பட்டதாரிகள் மீது இச்சமுதாயம் கொண்டுள்ள மாயையால், மதிப்பால் எத்தனை முறை வேண்டுமானாலும் அரசாங்கம் அவர்களைப் பயன்படுத்தும்? ஆனால், பாரிசான் ஏமாற்று வேலையை எப்படி மீண்டும்-மீண்டும் நடத்தி வந்தாலும் இந்தியச் சமுதாயம் ஏமாறத் தயாராக இருப்பதே பெரிய வேதனை, ஆச்சரியம்.
அதனால், புதிய வரவுகள் இருந்து கொண்டே இருக்கும், அந்த வகையில் அமைந்ததுதான் கடந்த பொதுத் தேர்தலுக்கு முன் பேராசிரியர் என்.எஸ்.ராஜேந்திரனை முன்நிறுத்தி அமைக்கப்பட்ட மலேசியத் தமிழ்ப் பள்ளிகளுக்கான மேம்பாட்டு திட்டவரைவு குழு என்பது கண்கூடு..
அதனை அமைத்த பிரதமர் நஜிப்பிடம் சற்றும் நேர்மையில்லை என்பதனை பக்காத்தான் தலைவர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. தமிழ்ப்பள்ளிகளின் மீது அக்கறை இருந்திருந்தால் அவர் கல்வி அமைச்சராகவோ அல்லது நிதி அமைச்சராகவோ, துணைப் பிரதமராகக்கூட இருந்த காலத்தில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டுக்கான திட்டத்தை அமல்படுத்தி இருக்கலாம்.
தேர்தல் வந்தால் குற்றவாளியும் ஹீரோ
ஆனால் 13 ஆவது பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் போலீசாரால் தண்டிக்கப்பட்ட அல்லது தேடப்பட்டு வந்த கடும் குற்றவாளிகளைக் கூட விட்டு வைக்கவில்லை பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் அவர் தம் பரிவாரங்களும். அவர்களுக்கும் ஏதாவது ஓர் அமைப்பின் பெயரில் நிதி வழங்கி, அவர்களின் கைகளை உயர்த்தி பிடித்துக் கொண்டு ஒன்றாக மேடையில் தோன்றிப் படம் எடுத்துக் கொண்ட அவலத்துக்குரியவர் நமது பிரதமர்.
இந்நாடு சுதந்திரம் அடைந்தது முதல் மலாய்க்காரர்களுக்கு எவ்வளவோ செய்த அம்னோவை, மலாய்க்காரர்களே கைவிட்டு விட்டனர். அவர்களிடம் இழந்த செல்வாக்கை, இழந்த ஓட்டு வங்கியை ஈடு கட்டவே இந்திய சமுதாயத்தின் தயவு தேவைப்பட்டது.
அதனை அடைய எவரெவர் கால்களையோ பிடித்தவர்தான் பிரதமர் நஜிப், அவர் தயாரிக்கும் நாடகத்தில் ஒரு சிவமானலும், சுப்பரமணியமானலும், டெனிசனாக இருந்தாலும் வேதாவோ, இந்திரனோ இராஜாந்திரனோ அவர்கள் நடிப்பு நன்றாக ‘’நம்பிக்கை’’யாக இருக்க வேண்டும், அதற்கு அமோகக் கைத்தட்டல் (ஓட்டு) கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுந்தான் இருந்தது.
பேராசிரியர் என்.எஸ்.ராஜந்திரனை முன்நிறுத்தி அமைக்கப்பட்ட மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டு திட்டவரைவு குழுவும் அந்த ரீதியில் அமைக்கப் பட்டதுதான் என்பதனை அவரின் பரிந்துரைகளும், நடவடிக்கையும் காட்டும்.
தேர்தல் கால சமூகத் தொண்டர்கள்
கடந்த பொதுத்தேர்தல் வரை தமிழ்ப்பள்ளிகளின் தேவைகள் குறித்து மறைமுகமாகக் கல்வி அமைச்சின் சார்பில், அவர் அறிக்கை விட்டு வந்ததை இந்தியச் சமுதாயம் கவனிக்காமலில்லை. ஆனால் பொதுத் தேர்தலுக்குப் பின் அரசியல் பின்பாட்டு பாடுவதைக் குறைத்துக் கொண்டவர், காஜாங் இடை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப் பட்டவுடன் மீண்டும் மலேசியத் தமிழ்ப் பள்ளிகளுக்கான மேம்பாட்டு திட்டவரைவு சமர்ப்பிப்பு என்ற நாடக அரங்கேற்றத்தைப் பிரதமரை வைத்து நடத்தியுள்ளார்.
அவர் சமர்ப்பித்த திட்டவரைவின் முக்கியக் கூறுகளாக அவர் பத்திரிக்கையில் குறிப்பிட்டது, 1. தமிழ்ப்பள்ளி வாரியங்கள் அமைப்பு 2. 65 விழுக்காடு பள்ளிகளில் திடல் இல்லை 3. பாலர்பள்ளி 4. பட்டதாரி ஆசிரியர்கள் 5. பள்ளிகளை இந்தியர்கள் வாழும் இடங்களுக்கு மாற்றியமைத்தல். 6. மற்றப்படி கட்ட மேம்பாடு, 7. கல்வி போதனை உபகரண மேம்பாடுகள் 8. பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு மானியம்.
காலாகாலமாகத் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு இச்சமுதாயத்தைச் சார்ந்த குப்பனும், சுப்பனும், ஆறுமுகமும், சண்முகமும், கோரி வந்ததைத் தானே அவரும் பட்டியலிட்டிருக்கிரார்!
பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம், தமிழ் அறவாரியம், ஈ.டபல்யூஆர்.எப். சைல்டு, தித்தியான் டிஜிட்டல், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் என்ற பல அமைப்புகளின் உதவிகளுடன் பற்பல திட்டங்களை 2009ம் ஆண்டுமுதலே, மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாட்டுக்குச் சிலாங்கூர் மாநில அரசாங்கம் மேற்கொண்டு வருகிறதே.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை உயர்விலும், தேர்ச்சி விகிதாச்சார உயர்விலும் சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளே முன்னோடியாகத் திகழ்கின்றன. 2008 ஆம் ஆண்டில் முதன் முறையாக ஆட்சியமைத்த பக்காத்தான் மறு ஆண்டே 40 இலட்சம் வெள்ளி சிறப்பு மானியத்தை ஒதுக்கித் தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாட்டுக்கான பணியைத் துவக்கியதே!
சமுதாயத்தின் வாழ்வில் பக்காத்தானுக்கு அக்கறை
கல்விப்பணி மாநில அரசின் கடமையல்லவென்று அது கைகழுவவில்லை. காரணம் பக்காத்தானிலுள்ள இந்திய சமுதாயத் தலைவர்கள் சமுதாயத்தின் அடிமட்டத்திலிருந்து வந்தவர்கள். இச்சமுதாயத்தின் வாழ்வில் அக்கறை கொண்டு செயல்படும் பல அரசு சார்பற்ற இயக்கங்களை நன்கு அறிந்தவர்கள்.
கல்வியின்றி இச்சமுதாயத்தைக் கறை சேர்க்கவே முடியாது என்று ஆணித்தரமான கருத்துடன் இந்திய சமுதாயத்திற்குச் சேவையாற்றும் இயக்கங்களை மதிக்கத் தெரிந்தவர்கள்.
பிரதமர் அமைத்த பணிக்குழு, அறிந்த நோயிக்கு கையிலிருக்கும் மருந்தைக் கொடுப்பதை விட்டு, அவதிப்படும் நோயாளியைக் காப்பாற்ற மருந்து ஆராய்சிக்கு குழுவை அமைத்துள்ளேன் என்று கூறுவதற்கு ஒப்பாகும். தமிழ்ப்பள்ளிகளின் விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கத் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும், அதனை அழிக்க மேற்கொள்ளப்படும் அரசியல் யுக்தியே என்பதனை மறக்கக் கூடாது. தமிழ்ப்பள்ளிகளின் மீதான ஆய்வும் ஒரு காலங்கடத்தும் செயல் என்றால் அது மிகையாகாது.
பேராசிரியர் என்.எஸ்.ராஜந்திரனின் மலேசியத் தமிழ்ப் பள்ளிகளுக்கான மேம்பாட்டு திட்டவரைவுகளின் பரிந்துரைகள் என்ன?
1.தமிழ்ப்பள்ளி வாரியம் – தமிழ்ப்பள்ளிகள் அதன் நலனைக் கவனித்துக் கொள்ளவும் அதற்கு ஒதுக்கப்படும் மானியங்களையும், அதன் சொத்துகளையும் முறையாக நிர்வகிக்கவும், பள்ளியின் வளர்ச்சிக்கு வாரியங்கள் அவசியம் என்ற கருத்து புதியதல்ல. கல்வி மேம்பாட்டு பணியில் ஈடுப்பட்டு வந்தவர்கள் இந்தக் கோரிக்கைக்கு என்றும் ஆதரவாக இருந்து வந்துள்ளனர்.
பள்ளி நிலங்களை ஒதுக்கிக்கொள்ளும் ம.இ.கா
கடந்த 2010 ம் ஆண்டு சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயா தோட்டமாளிகையில் அதற்கான விளக்கக் கூட்டங்களையும் பெற்றோர் ஆசிரியர் சங்கம், தமிழ் அறவாரியம், ஈ.டபல்யூ.ஆர்.எப். போன்ற பொது அமைப்புகள் ஏற்பாடு செய்தன. அதில் தமிழ்ப்பள்ளி வாரிய அமைப்பு, விதி மற்றும் அவசியம் குறித்து விளக்கப் பட்டது. கூட்டத்திற்கும் முழு ஆதரவைச் சிலாங்கூர் மாநில அரசு வழங்கியது. இதில் அரசின் பிரதிநிதியாக அன்றைய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
2.தமிழ்ப்பள்ளிக்கூடங்களில் திடல் இல்லை, எப்படி இருக்கும்? தமிழுக்கும், அடுத்து வரக்கூடிய தமிழ் சமுதாயத்திற்கும் ஜீவ நாடி தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் என்பதனை ம.இ.கா தலைவர்களே அங்கீகாரிக்காத பொழுது, அவர்களின் பங்காளியான பாரிசான் தமிழ்ப்பள்ளிகளுக்கு எப்படி மதிப்பளிக்கும்?
தமிழ்ப்பள்ளி திடலுக்கு வேண்டாம்! நிலத்தை ம.இ.காவுக்கு கொடுத்து விடுங்கள் என்ற சிந்தனையில் எடுத்துக் கொண்டதுதானே இன்று ம.இ.காவுக்கு சொந்தமாகவுள்ள எப்பிங்கம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 3 ஏக்கர் நிலம்.
அது மட்டுமா! சைம் டார்பி நிறுவனம் கிள்ளான் புக்கிட் ராஜா தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கிய ஐந்தே முக்கால் ஏக்கர் நிலத்திலிருந்து 2 3\4 ஏக்கர் நிலத்தைத் தனியாகப் பிரித்தெடுத்து ஒதுக்கிக் கொண்டால் எப்படித் திடல் இருக்கும்?
இப்படிப்பட்ட அயோக்கியச் செயல்களுக்குத் தோட்ட நிர்வாகங்களின் ஒத்துழைப்பை நாடும் அரசியல்வாதிகளை நம்பி, இச்சமுதாயத்தின் சொத்துகளுக்கு அவர்களைக் காவலனாக நிறுத்த முடியுமா? அப்படிப்பட்ட பொறுப்பை ஒப்படைத்தால், பள்ளிகளே காணாமல் போகாதா? நிலைமை, இப்படியிருக்கத் தோட்ட நிர்வாகங்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு அதிக இடத்தை எப்படி ஒதுக்கும்?
இந்தியர்கள் புறம்போக்கு குடிசைவாசிகளாக நீண்ட காலம் வாழ்ந்த சுங்கைவே கம்பம் லிண்டோங்கானில், சுமார் 50 ஏக்கர் நிலத்திலிருந்த இந்தியர்களின் குடிசைகள் அகற்றப் பட்டன. ஆனால் அங்கு தமிழ்ப்பள்ளிக்கு ஒரு ஏக்கருக்கும் குறைவாக ஒதுக்கப்பட்டும் அந்நிலத்தில் அடிக்கல் நாட்ட ஓர் இந்திய அமைச்சரே ஓடோடி சென்று, அதனையும் பாரிசானின் சாதனையாகப் பறைசாற்றினால், அதிகப்படியான அரசாங்க நிலம் தமிழ்ப்பள்ளிகளுக்கு எப்படிக் கிடைக்கும்?
தமிழ்ப்பள்ளியிடமிருந்து ம.இ.கா அபகரித்த நிலத்தினை மீட்க உண்ணா விரதமிருப்பர்களிடம் நிலத்தைத் திரும்ப ஒப்படைக்க வேண்டிய ம.இ.கா துணை அமைச்சர் சரவணன் போன்ற அறிவு கொழுந்துகள் எந்தக் காலத்தில் எவன் தமிழ்ப்பள்ளிக்கு 6 ஏக்கர் நிலம் ஒதுக்கிக் கொடுத்துள்ளான் என்று ஏக வசனம் பேசினால் எப்படித் தமிழ்ப்பள்ளி திடலுக்கு நிலமிருக்கும்.
ஆரம்பப் பள்ளிகளுக்கு ஆறு ஏக்கர் நிலமாவது இருக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் பரிந்துரையைக்கூட அறியாத அரசியல் வாதிகளுக்கும் தமிழ்ப்பள்ளி விசயத்தில் அந்தப் பரிந்துரையைக் காலில் போட்டு மிதிக்கும் அரசாங்க அதிகாரிகளையும் ஊக்கம் கொடுத்து வளர்ப்பதே பாரிசான் தானே!
3.பாலர் பள்ளி – பாலர் பள்ளிகளின் தேவையை உணர்ந்து பள்ளிகளில் 70 ம் ஆண்டுகளிலேயே அரசாங்கச் சார்பு இயக்கங்கள் , மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. பிறகு, அவை கிராமப்புற மேம்பாட்டு அமைச்சின் கீழ் நாடு முழுவதும் முழு அரசாங்க மானியத்துடன் கிரமங்களில் எல்லாம் கெமாஸ் பாலர்பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் தோட்டப்புறங்கள் ஏன் புறக்கணிக்கப் பட்டன?
தேவையை உணர்ந்து சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளில் சைல்டு நிறுவனத்தின் உதவியுடன் 2009 ஆம் ஆண்டு மாநில அரசாங்கம் பாலர் பள்ளிகளை 9 பள்ளிகளில் தொடங்கியது. ஆனால் கல்வி இலாக்காவின் மிரட்டலுக்குப் பயந்து சில தமிழ்ப்பள்ளிகள் மாநில அரசின் பாலர் பள்ளிகளை ஏற்க மறுத்தன. தானும் செய்யாமல் மற்றவரையும் தடுத்தால் மேம்பாடு எப்படி வரும்?
அதேவேளையில் பிரதமரின் துணைவியாரின் பிரத்தியேகத் திட்டமாகப் பெரிய விளம்பரத்துடன் பள்ளிகளில் பாலர்பள்ளி ஆரம்பிக்கப் பட்டதே அதுவும் வேடமா?. பேராசிரியர் என்.எஸ்.ராஜேந்திரன் பாலர் பள்ளியின் அவசியத்தை வலியுறுத்துவது, பிரதமரின் துணைவியார் ரோஸ்மாவின் திட்டமும், தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்த மட்டில் கண் துடைப்புதான் என்கிறாரா?
4. பட்டதாரி ஆசிரியர்கள் – நீண்ட காலத்திற்கு முன்பே முற்றிலும் செயல் படுத்தியிருக்க வேண்டிய திட்டம். நாட்டிலுள்ள 523 தமிழ்ப்பள்ளிகளுக்கு இது போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு இன்னும் கோரிக்கைகளும், மகஜரும் ஆய்வறிக்கையும் வழங்க வேண்டியிருப்பது கவலைப்பட வேண்டிய விஷயம்.
5. பள்ளிகளை இந்தியர்கள் வாழும் இடங்களுக்கு மாற்றியமைத்தல், அவர் கூறுவது போல், பள்ளிக்கூடம் கட்ட நிலம் ஒதுக்கப்பட்ட இந்தியர்கள் அதிகம் வாழும் காஜாங் உட்படத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு இடங்களுக்குத்தான் 6 தமிழ்ப் பள்ளிகளின் கட்டுமானத்திற்குப் பிரதமர் 2012 ஜனவரியில் பூச்சோங் கின்ராராவில் வாக்குறுதி கொடுத்தார். அது என்னவானது?
அதனை எத்தனை முறை பிரதமருக்கு ஞாபகப் படுத்துவது. பொதுத்தேர்தலில் நினைவு படுத்தினோம், மீண்டும் காஜாங்கில் நினைவு படுத்துகிறோம். பாரிசான் ஆட்சியில் 400க்கு மேற்ப்பட்டப் பள்ளிகள் காணமல் போனது, ஆனால் நாம் வற்புறுத்துவது பிரதமர் வாக்குறுதி அளித்த ஆறு தமிழ்ப் பள்ளிகளையாவது கட்ட வேண்டும் என்று தானே!. ஒருவேளை, இப்பொழுது சிலாங்கூரில் எதிர்க்கட்சி ஆட்சி என்பதனால் தயங்குகின்றாரா?.
அப்படியானால் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே பெட்டாலிங் பி.ஜே.எஸ் 1ல் அன்றைய ம.இ.கா ஆட்சிக்குழு உறுப்பினரான வி.எல் காந்தன், தமிழ்ப்பள்ளிக்கு நிலத்தை ஒதுக்கிக் கல்வி அமைச்சின் அனுமதிக்காக நடையாய் நடந்தாகப் பத்திரிக்கைகளுக்குச் செய்தி கொடுத்துள்ளாரே, அது எப்படி? அதற்காவது வழி பிறக்குமா?
ஜோகூர், கெடா மாநிலங்கள் பாரிசானுடையது தானே, அங்கும் பள்ளிகள் கட்டப் பிரதமர் கொடுத்த வாக்குறுதிகள் என்னவானது?.
6. மற்றபடி கட்டட மேம்பாடு- மிக முக்கியம் ஆனால் பள்ளியென்றால் அதன் கட்டடம் எப்படி இருக்க வேண்டும். என்னென்ன வசதிகளைக் கொண்டு இருக்க வேண்டும். கட்டுமானம் குறிப்பிட்ட காலத்தில் கட்டி முடிக்கப் பட வேண்டும். அரசாங்கக் குத்தகைகள் நம்மவர்களுக்கு வழங்குவதில் சிக்கல் இருந்தால் அதனைப் பெற்றோர் ஆசிரியர் சங்கமும், வாரியமும் இணைந்து செய்யலாம் என்பதனை எடுத்துக் காட்டவே ஷா ஆலாம் மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியைச் சிலாங்கூர் மாநில அரசு பெற்றோர் ஆசிரியர் சங்கம், வாரியமுடன் இணைந்து கட்டியது. அங்கு இருப்பது போன்று எல்லாத் தமிழ்ப்பள்ளிகளிலும் மணி மண்டபமுடன் கட்ட வேண்டும் என்பது அல்ல. பள்ளிகள் கட்டும் பொழுது பொது நல நோக்கமும் இருக்க வேண்டும். நீண்ட கால அடிப்படையில் அதுவும் ஷா ஆலாம் போன்ற இடத்திற்கு இந்தியச் சமுதாயத்தின் தேவைக்கு அப்படிப்பட்ட மண்டபம் கட்டப் பட்டுள்ளது. ஆனால் பொதுப் பணத்தில் சிக்கனமாக மேற்கொள்ளப்பட்டது.
இறுதியாகப் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு மானியம் – இதில் எந்தப் புதிய கண்டு பிடிப்பும் இல்லை. எல்லா இடங்களிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் செயல் படுகின்றன. பலர் தங்களது பொன்னான நேரத்தைப் பள்ளியின் நலனுக்குச் செலவிடத் தயங்குவதில்லை. ஆனால் நமது சமுதாயத்தின் பொருளாதார நிலை ஒரே சமமாக இல்லை.
அதனால் ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களுக்குப் பள்ளி சீருடை மற்றும் போக்கு வரத்து போன்ற உதவிகளைச் செய்யவும், சில கல்வி மேம்பாட்டு பணிகளில் உதவவும், சிலாங்கூரில் ஒவ்வொரு ஆண்டும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 3 ஆயிரம் வெள்ளி முதல் 20 ஆயிரம் வெள்ளிகள் வரை வழங்கப் படுகிறது.
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு வழங்கிய நிதி:
2009 ல் ரிம 677,000.00 2010 ல் ரிம 519,000.00
2011ல் ரிம639,976.00 2012 ல் ரிம 777,500.00
2013 ல்ரிம 927,500.00
அதனுடன் நமது பிள்ளைகளின் கற்கும் ஆற்றலை மேம்படுத்த மற்றச் சமுகங்களை விட நாம் அதிகச் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். என்பதால் :
ஃகணினி கல்வி.
ஃயு.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சி வகுப்புகள்.
ஃவிரைவில் கற்றுக்கொள்வதில் ஆற்றல் குறைந்தவர்களுக்குப் பயிற்சி வகுப்பு, மற்றும் புத்தகங்கள் தயாரிப்பு.
ஃவாசித்தல் மற்றும் எழுதுதலுக்கான பயிற்சி.
ஃமாணவர்களின் திறனை வளர்க்கும் பயிற்சி.
ஃமாணவர்களுக்கான ஆங்கிலப் பட்டறை.
ஃஇளந்தளிர் – மாணவர்களுக்கான கல்வி இதழ்.
ஃதமிழ்ப்பள்ளிகளில் ஆய்வு.
ஃசிறுவர்களுக்கான இயற்கை உலாக்கள் YNC (Young Nature Campers).
ஃபெற்றோர்களுக்கான பயிற்சி -மாணவ நலனில் பெற்றோர்களின் பங்கு, PASS (Parents Assuring Students Success Seminars).
ஃஆங்கிலப் பயிலரங்கு TIC (Total Immersion Camp).
ஃஅறிவியல் கூடம்.
ஃவாசிப்பு கூடம்.
ஃகைவினை தொழில் கூடங்கள் என்று பல திட்டங்களை அரசு சாரா இயக்கங்களின் உதவியுடன் மாநில அரசின் பொருளாதார ஆதரவில் நடத்தப்பட்டது.
ஆனால், மிக முக்கியமான சில கடமைகள் குறித்து மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான மேம்பாட்டு திட்டவரைவு அறிக்கையில் எதுவும் காணப் படவில்லை.
நிலச்சர்வே மற்றும் பள்ளிப்பற்றிய குறிப்பு – இப்பொழுது எஞ்சியுள்ள தமிழ்ப்பள்ளிகளைப் பற்றிய குறிப்புகளை ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியும் கொண்டிருக்க வேண்டும். ஒரு தமிழ்ப்பள்ளி அமைந்திருக்கும் இடம், மாணவர்கள் எங்கிருந்து வருகின்றனர், முடிந்தால் அப்பகுதியில் உள்ள அரசாங்க உபரி நிலம் பற்றிய விவரம், பள்ளி இருப்பது அரசாங்க \ தனியார் நிலமா, உரிமையாளரின் விவரம், அதன் நிலத்தின் அளவு, பள்ளி நிலம் சர்வே செய்து, முழு நிலத்திற்கும் வேலி அமைக்க வேண்டும்.
அதற்கான மானியங்களையும் அரசு வழங்க வேண்டும். இது மாணவர்களின் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, மற்றவித மேம்பாடுகள் மற்றும் பள்ளி நிலத்தில் ஊடுருவை தடுக்க அல்லது பள்ளிக்கு நில விவகாரத்தில் நீதி பெற அவசியப்படுகிறது.
சிலாங்கூரில் இது போன்ற தகவல்களை மாநில அரசின் செலவில் அரசாங்க உதவி பெறும் பள்ளிகள் பெற்றதால் சில பள்ளிகளுக்கு மாற்று இடங்களைப் பெறச் சம்மந்தப் பட்ட நிறுவனங்களிடம் பேச்சு நடத்தவும், பள்ளி நிலத்தில் சில தரப்பினரின் ஊடுருவு செய்ததை உடனடியாகத் தடுத்து வெளியேற்றவும் முடிந்தது.
தமிழ்ப்பள்ளிகளுக்கு மாற்று நிலம் பெருவது கல்வி அமைச்சின் வேலையல்ல என்று கைகழுவுவதே கல்வி இலாக்காவின் வேலையாகிவிட்டது, பெரிய வீடமைப்புகள் மேற்கொள்ளும் போது, தேவைக்கு ஏற்றார் போல் குறைந்தது 10 விழுக்காடு நிலம் பொதுத் தேவைக்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால் அதிலிருந்து தேசியப் பள்ளிகளுக்கு வழங்கப்படுவது போன்று தாய்மொழிப் பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்கப் படுவதில்லை.
அப்படியே ஒரு வீடமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ஒரு தமிழ்ப்பள்ளி பாதிக்கப் பட்டாலும் தமிழ்ப்பள்ளியை அகற்றக் கல்வி இலாக்கா காட்டும் அக்கறையை, அந்தப் பள்ளிக்கு மாற்று நிலம் பெற காட்டுவதில்லை. தாய்மொழிப் பள்ளிக்கு நிலம் பெறுவது தங்கள் கடமையல்ல என்று நழுவிக் கொள்கின்றனர். அதனைப் போலவே பள்ளிக்கான கட்டடங்களைக் கட்டுவதிலும் பல காரணங்களைக் கூறி ஒதுங்கிக் கொள்கிறது கல்வி அமைச்சு.
ஆக , இவைகள் மட்டுமல்ல இதற்கு மேலும் மக்களுக்கு எது நல்லது, அதனை எப்படிச் செய்யலாம் என்ற எல்லா விவரமும், அதற்கான ஆற்றலும் அனுபவமும் அரசாங்கத்திடம் உண்டு. ஆனால் இந்திய சமுதாயத்திற்கு உதவ வேண்டும் என்ற அக்கறை மட்டும் அதற்கு இல்லை.
கிராமப்புற மேம்பாட்டு அமைச்சின் கீழ் நாடு முழுவதும் செயல்படும் கெமாஸ் செயல் திட்டங்களையும் , மாரா செயல் திட்டங்களையும் ஆராய்ந்தால், பின் தங்கிய தமிழ்ப்பள்ளி மட்டுமின்றி, இந்திய சமுதாயமே முன்னேற என்னென்ன தடைகள், அதனை எப்படி அணுகுவது, அதில் எப்படி வெற்றி பெறுவது என்ற சகல விவரங்களும் கிடைக்கும். ஆனால் நோக்கம் தேர்தல் வெற்றியாக மட்டுமே, அங்கு பிரதமர் கொடுத்த வாக்குறுதியே காற்றில் பறக்கும் போது, பேராசிரியர் டத்தோ என்.எஸ்.ராஜந்திரனின் பரிந்துரைகள் எங்குப்போகும்.
அதனால் பிரதமர் பொதுத்தேர்தலுக்கு முன் பேராசிரியர் என்.எஸ்.ராஜந்திரனினை முன்நிறுத்தி அமைத்த மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுகான மேம்பாட்டு திட்டவரைவு குழு முழு அரசியல் கண்துடைப்பு. இப்படிப்பட்ட குழுவில் பங்கேற்பதே அவர் இச்சமுதாயத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம்.
அதனை உணர்ந்து வேதமூர்த்தியின் பாணியில் வெளியேறப்போகிறார, அல்லது ம.இ.கா பாணியில் இருக்கப்பேகிறாரா முனைவர் என் .எஸ் ராஜேந்திரன் என்பதனைக் காலம் சொல்லும்.
வே.இளஞ்செழியன்,பேராசிரியர் என்.எஸ்.ராஜேந்திரன் இதற்கு பதில் அளிக்க வேண்டும்! ஆய்வு கட்டுரை ஒளிவு மறைவு இன்றி அனைவரின் பார்வைக்கு வைக்க வேண்டும்! தமிழ் மொழி ஆர்வாளர்கள் இதனை தீவிரமாக கண்காணித்து வர வேண்டும்! இனியும் ஏமாற்று வேலைகளுக்கு இடம் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்! சீன பள்ளிகளின் தரத்திற்கு நாமும் வெற்றி நடை போட வேண்டும்! ம இ கா திருடர்களிடம் இழந்த அனைத்து நிலங்களையும் உடனடியாக மீற்க வேண்டும்!
அண பாக்கியநாதன் கூற்றுப்படி ஏறக்குறைய 3.5 மில்லியனை கடந்த 5 ஆண்டுகளில் சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப பள்ளிகளுக்கு பிரதி இயக்கங்களுக்கு வழங்கி உள்ளது.
ஆனால் வளர்ச்சி RESULT ல் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.இதுவரை மாநிலம் செய்யாத சாதனை தான். மத்திய அரசு 150 இதுவரை மில்லியனை தந்ததை எழுதவில்லை ஏன்?
அரசியல் நோக்கத்தில் உங்கள் கட்டுரை இருந்துள்ளது .நியாயங்கள் சொல்லபட வேண்டும்.முனைவர் டததோ ராஜேந்திரன் அவர்களின் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு வரைவு திட்டத்தை இவர் பார்த்தாரா ?அல்லது அந்த கூட்டத்தில் கலந்து விபரம் பெற்றாரா என்பதும் இல்லை என்றே தெரிகிறேன்.
கடந்த 5 ஆண்டுகளில் சிலாங்கூர் மாநிலதில் மட்டும் தமிழ்ப பள்ளி உதவி என்றால் நாட்டில் உள்ள 523 +புதிய 7 பள்ளிகளின் மேம்பாட்டுக்கு யார் துணை நிற்க போவது?
முனைவர் ராஜேந்திரன் ஒரு ம இ க காரர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் அரசியல் நாடகம் ஆடுகிறார் என்ற குற்றசசாட்டு அபத்தமான சிறிய சிந்தனை மிக்க பதிப்பாகும். 523 பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரிப்பது என்பது சாதாரண வேலை இல்லை.
கடந்த கால ஒப்பாரிகளை இப்போது நஜிப் காலத்தில் ஒப்புவிப்பது அறிவுடைமையாகாது.கால மாற்றம் ,அணுகு முறை ,தேவைகளின் ஆளுமை ,அரசியல் தேசிய நீரோட்ட நிலைகளை கட்டுரையாளர்
கவனித்து எழுத வேண்டும்.குறை காணும் கனத்த மண்டையின் விபரீத தகவல்கள் காலத்துக்கு ஒவ்வாத தப்பான ஆய்வும் மக்களை குழப்பும்.
ராஜேந்திரனின் தமிழ் மீதான தனிப்பெரும் உணர்வு தமிழ்ப் பள்ளிகளை மீட்டு எடுக்க வேண்டும் என்ற உணர்வை நீங்கள் ஏன் தப்பாக்கி அரசியல் சாயம பூசிநீர்கள் என்பது சில்லறை த தனமாக உள்ளது.மேலும் தமிழ்ப பள்ளிகள் விசியத்தில் அவரின் முயற்சிகளை அரசின் திட்டங்களை
தேர்தல் நாடகம் என்ற உங்கள் அறிவிலி தனம் வியப்பாக உள்ளது.தமிழ் பள்ளிகளுக்கு கிடைக்கும் வசதியை வசைப்பாடி கொச்சையாக சொன்னால் அரசியல் வேமாநித்தனம் எனலாம்.
சிலாங்கூர் மாநில கட்டுபாட்டில் உள்ள பல தமிழ்பபள்ளிக்கான அதிக படி நிலங்களை பள்ளிக்கு பெறுவதில் இன்றும் சிரமம் உள்ளது.உதாரணத்துக்கு அம்பாங் தமிழ்பபள்ளி முக்கால் ஏக்கரின் 3 கட்டடங்கள் சுற்றி உள்ள சுமார் 4 ஏக்கர் நிலத்தை பெரும் முயற்சிகள் தோல்வியில் இன்று மாநில அரசு ஒப்புதலுடன் திடலுக்கு மேலே 6 வழி மேற்சாலை நிர்ணயிப்புக்கு மாநில அரசு வழி விட்டுள்ளது. இப்போதய PR மாநில ஆட்சிக்குழுவும் முதல்வரும் கண்ணை மூடிக்கொண்டுதான் ஒப்புதல் வழங்கி இருக்க வேண்டும். சாலையை மாற்றி அமைக்க எதனையோ வழி இருந்தும் பள்ளித திடலை முட்டி மோதி பள்ளியின் அழகை அசிங்கப்படுத்த இவர்களின் அரசியல் தனம் கேவலமாக உள்ளது. வட்டார PR நாடுளுமன்ற உறுப்பினர், இரண்டு சட்ட மன்ற உறுபினர்கள் தூங்கி இனத்துக்கும் தமிழ் மொழிக்கும் துரோகம் செய்துள்ளனர்.
PK கட்சி தமிழர்களின், இந்தியர்களின் தேவைகளை குறிப்பாபாக கல்வி /தமிழ்க்கல்வி /தமிழ் மொழி விசியத்தில் இதுவரை சாதித்தது என்ன என்றும் நீங்கள் சொல்லி இருக்க வேண்டும். சிலாங்கூர் மாநில தமிழ்ப்பளிக்கு ஆஸ்ரமம் நிலைமை என்ன ஆனது ?ஏன் எழுதவில்லை?
மாநிலம் இஸ்லாமிய மற்றும் மலாய் பள்ளிகளுக்கு கொடுத்த பணத்தையும் நீங்கள் எழுதி இருக்க வேண்டும்.ஒப்பிட்டு பாருங்கள் 3 மிலியன் இந்த சிலங்கொர் மாநில தமிழ் பள்ளிகளுக்கு போதாது !இன்று இந்த 2014 ஆண்டுக்கு இதுவரை எந்த ஒதுக்கீடும் இல்லை ஏன் என்று நீங்கள் எழுதவில்லை.?
தமிழ் மொழிக்கு 2013 -2025 புதிய கல்வி கொள்கையில் பாதிப்பு உண்டு என்பதை நீங்கள் எழுதவில்லை.தமிழ்பபள்ளிகளின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு தருகிற முக்கியத்துவம் தமிழ் மொழிக்கும் தர வேண்டும் என்ற உரிமை போராட்டம் உங்களிடம் இல்லை. உங்கள் அரசியலை மெச்சிக்க தேர்தலை விலைபேசி இதை ராஜேந்திரன் முயற்சிகளை ஒரு நாடகம் என்று சிந்திக்கும் உங்கள் மூளையை சரியாக சவரம் செய்ய வேண்டும். தமிழ் வளர்ப்போம் தமிழர்களை காப்போம்.
ராஜேந்திரனுக்கு டத்தோ கிடைத்திருக்கு அது போதுமே .
“சமுதாயத்தின் வாழ்வில் பக்காத்தானுக்கு அக்கறை..”.
.
கல்விப்பணி மாநில அரசின் கடமையல்லவென்று அது கைகழுவவில்லை. காரணம் பக்காத்தானிலுள்ள இந்திய சமுதாயத் தலைவர்கள் சமுதாயத்தின் அடிமட்டத்திலிருந்து வந்தவர்கள். இச்சமுதாயத்தின் வாழ்வில் அக்கறை கொண்டு செயல்படும் பல அரசு சார்பற்ற இயக்கங்களை நன்கு அறிந்தவர்கள்.
கல்வியின்றி இச்சமுதாயத்தைக் கறை சேர்க்கவே முடியாது என்று ஆணித்தரமான கருத்துடன் இந்திய சமுதாயத்திற்குச் சேவையாற்றும் இயக்கங்களை மதிக்கத் தெரிந்தவர்கள்
பிரதமர் அமைத்த பணிக்குழு, அறிந்த நோயிக்கு கையிலிருக்கும் மருந்தைக் கொடுப்பதை விட்டு, அவதிப்படும் நோயாளியைக் காப்பாற்ற மருந்து ஆராய்சிக்கு குழுவை அமைத்துள்ளேன் என்று கூறுவதற்கு ஒப்பாகும். தமிழ்ப்பள்ளிகளின் விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கத் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும், அதனை அழிக்க மேற்கொள்ளப்படும் அரசியல் யுக்தியே என்பதனை மறக்கக் கூடாது. தமிழ்ப்பள்ளிகளின் மீதான ஆய்வும் ஒரு காலங்கடத்தும் செயல் என்றால் அது மிகையாகாது.
பேராசிரியர் என்.எஸ்.ராஜந்திரனின் மலேசியத் தமிழ்ப் பள்ளிகளுக்கான மேம்பாட்டு திட்டவரைவுகளின் பரிந்துரைகள் என்ன?
என்று எழுதிய அண பாக்கியநாதன்.சுய சிந்தனையில் எழுதினாரா என்று தெரியவில்லை.தமிழ்ப பள்ளியும் தமிழ் மொழி கல்வியின் சிக்கலும் ஒரு தேசிய இனத்தின் கடுமையான காலம்.523 தமிழ் பள்ளிகளை இதுவரை முடிந்த அளவுக்கு காப்பாத்தியது ம இ கா என்றால் மறுப்போர் இல்லை.நேற்று காளானை போல சிலாங்கூர் மாநிலம் 3 மில்லியனை PPIBG கு தாரை வார்த்து கொடுத்து கடந்த தேர்தலுக்கு முதலீடு செய்ததுதான் உண்மை.ஆனால் பணங்கள் பள்ளிக்கு உதவியதா என்று யாருக்கும் தெரியவில்லை அப்படி ஒரு கணக்கியல் குறிப்பும் கிடையாது.அம்பாங் தமிழ் பள்ளிக்கு கொடுத்த 85 ஆயிரம் வெள்ளி கணினி மையம் இன்றும் மாயமாகதான் பழைய கணினியை பூட்டி PIBG துரை அப்பா மாணவர்கள் வாயில் பூதிங் வைத்ததார் ? கேட்டீர்களா ?
கொடுப்பது போல் கொடுத்து வசூல் பண்ண குறிப்புகளும் உண்டு தம்பி !
வெறும் அரசியல் கூப்பாடுக்கு கும்பல் சேர்த்து PIBG களுக்கு வசூல் தந்ததால் வோட்டும் கிடைத்து மாநிலத்தை பிடித்தீர் அப்புறம் இதுவரை தமிழ்ப பள்ளிகள் மீது மாநிலம் என்ன மேம்பாடு கொண்டு வந்தீர்?
மத்திய அரசு BN னிடம் உள்ளதால் தமிழ்பபள்ளிகள் வாழ கஷ்டப் பட்டாலும் வாழ்கிறது. உங்கள் மாநில கல்வி எஸ்கோ விடம் தமிழ் பள்ளிகளுக்கு என்ன உள்ளது என்று கேட்டு இங்கே பதிவு செயுங்கள்.குறிப்பா 40 கும் மேல் LPS அமைத்தும் நிலங்கள் அநாதை நிலைதான். ஏன் சரியா செய்ய தெரியாதா …? இதுக்கும் மாநில முதல்வரை கொட்டிக்கொண்டேதான் இருக்க வேண்டுமா? மலாய் இஸ்லாம் பள்ளிகளில் LPS நில் வேலைகள் தானாக நடக்கிறது தெரியுமா? போயி ஆய்வு பண்ணுங்க சார்?
தோழர் பொன் ரெங்கன் அவர்களுக்கு ஒரு வேண்டு கோள், பேராசிரியர் டத்தோ என்.எஸ் .ராஜேந்திரன் அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் ? அவரின் எல்லா பிள்ளைகளும் எந்த பள்ளியில் ஆரம்ப கல்வி கற்றனர் என்பதை தயவு கூர்ந்து அப்பாவி ஏழை இந்திய சமுதயத்திக்கு அறிவிப்பது முதல் கடமை.நம்மை இதுவரை ஆண்டதாக சொல்லப்படுகின்ற அனைத்து தலைவர்களுமே தங்களது பிள்ளைகளை தமிழ் மொழி பள்ளிக்கு அனுப்ப வில்லை.தமிழ் பள்ளியை வைத்து அரசியல் நடத்தினர்.அரசியல் வாதிககள் என்றாலே மோசடி பேர்வழிகள் என்று சொல்லும் அளவுக்கு இருக்கின்றனர் ஆளும் கட்சியை சேர்ந்த தமிழின தலைவர்கள்.இவர்களை போன்று இந்த பேராசிரியரும் ஒரு மோசடி பேர்வழியாக இருக்க கூடாது.முதலில் அவரது குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தார்கள் என்பதை பத்தி செய்யும் படி தாழ்மையுடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.அதக்கு பிறகு சந்திக்கிறேன் வணக்கம்.
தனி மனிதன் அல்லது அவர் அவர் குழந்தைகளின் கல்வி மொழி தேர்வு என்பது அவர்களின் உரிமை. யுனஸ்கோ சொல்வது போல எவரும் நடப்பதில்லை .ஏன் தமிழ்ப பள்ளிகளின் தானைத்தலைவன் என்ற சாமிவேலு பிள்ளைகள் கூட தமிழ்ப்பள்ளிக்கு போக வில்லை தமிழ் நேசனை வைத்து வேள்பாரி வாய் கழுவ வில்லையா?
மொழி உணர்வு இன உணர்வு தன் பிள்ளளைகளை வைத்து சீட்டு ஆட வேண்டிய அவசியமில்லை. தமிழ் படித்த எத்தனையோ பேடிகளை இந்த நாடு கண்டுள்ளது.தமிழ் படிக்காத தமிழ் உணர்வாளர்களையும் நாம் பெற்றுள்ளோம். தமிழ் பள்ளியில் படித்து துணை அமைச்சராக இருந்து ம இ கா கல்வி குழு தலைவராக இருந்த PPROF மாரிமுத்து கூட தமிழ் வளர்ச்சிக்கு உதவ வில்லை.தன் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பவில்லை. உலக தமிழ் ஆராச்சி மையத்தை கடைசியாக மூடியவரும் இவர்தான். அரசியலில் பேரு போட தமிழ் ஆராச்சி மாநாட்டை முதலீடாக வைத்த மண்டைகள் பட்டியல் வேண்டுமா?
அரசு ராஜேந்திரனிடம் ஒரு பொறுப்பு கொடுத்துள்ளது அதற்கு அவர் தகுதியானவர் என்பதை அவரின் CV சொல்கிறது கடந்த இரண்டு ஆண்டுகளில் 150 மில்லியனை தமிழ் பள்ளிகளுக்கு பெற்று தந்துள்ளார் இன்னும் பல கோடிகளை பெறுவார்.
அவர் பிள்ளைக்கு அவர் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். தமிழ்பபள்ளிக்கும் தமிழ் பிள்ளைகளுக்கும் என்ன செய்கிறார் என்பதை நினைத்து பாரட்ட கற்று கொள்ளவும்.
ஆமாம் தெனாலி உணர்வோடுதான இருந்தீர்கள் ஏன் திடீர் என்று தனி மனித தாக்கு. அவர் யார் என்று பார்க்க வேண்டாம் அவர் என்ன செய்கிறார் என்று மதிக்கப பழகுங்கள்.
சமுதாய சீர்கேடுகளை நாம் பேசுகிறோம் ஆனால் சமுதாய சிதறல் குறித்து நாம் சிந்திக்க வேண்டும் இப்படி சிதறும் உங்களை போன்ற எண்ணங்கள் மாற வேண்டும்.நல்லவர்களை வல்லவர்களை தமிழ் வெல்ல வேலை செய்ய விடுங்கள்.
தோழர் பொன் ரேங்கனுக்கு எனது பாராட்டுக்கள்.எதையும் மன்னிக்கும் மா பெரும் மனப்பான்மை தமிழர்களுக்கு மட்டுமே உண்டு .அதுவே நமது பளயினமாக தற்போது மாறிவிட்டது.நமக்கு வழிகாட்டியாக படித்தவர் ஒருவரை பின்பற்றுகிறோம்.ஆனால் அவரே தனது நிஜ வாழ்கையில் உண்மையாக இல்லை .வெளியில் பேசுவது ஒன்று ஆனால் தனது சொந்த வாழ்க்கையில் கடை பிடிப்பது வேறு.அப்படி என்றால் இது அரசியல் வாதிகளை போல் emaattru வேலை அல்லவா என்பதை ஏன் உணர மறுக்கின்றிர்கள்.
இந்த நாட்டில் சீன மொழி பள்ளிகளின் வெற்றிக்கு யார் காராணம்.அந்த இனத்தில் உள்ள படித்த கல்விமான்கள் தான் அதற்க்கு முக்கிய காரணம்.அன்று முதல் இன்று வரையில் சீன சமுகத்தில் உள்ள சமுக பொது இயக்கங்களை இவர்கள் தான் வலி நடத்தி வருகின்றனர்.அம்நோவினரும் பொது தேர்தல் காலத்தில் இவர்களிடம் தான் வாக்கு பேரம் பேசு கின்றனர்.இந்த படித்த சீன தலைவர்கள் சமுதாய நலனை முன்வைத்து தங்களது கோரிக்கைகளை பெறுகின்றனர்.சீன சமுதத்தில் துரோகிகளை மன்னிக்க மாட்டார்கள்.அவர்கள் படித்தவர்களாக இருந்தாலும் விடமாட்டார்கள்.இதுவே சீனர்களின் இன்றை இந்த இமாலய வெற்றிக்கு மா பெரும் காரனம்மாகும்.
தோழர் பொன் ரெங்கன் அவர்களே உங்களது கூற்றை நான் மதிக்கிறேன்.பேராசிரியர் தன் ஸ்ரீ மாரிமுத்துவை நான் மன்னிக்க முடியாது.அது போலவே தங்கைகளும் பேராசிரியர் டத்தோ ஏன்.எஸ்.ராஜேந்திரனை தனி மனித உரிமை என்று கூறி மாணிக்க கூடாது .இவர்களை போன்றே அதிகமான படித்த துரோகிகள் நமது சமுதத்தில் இருக்கின்றனர்.மலாயா பல்கலைகழக இரண்டாவது கல்லூரியின் பேராசிரியர் ராஜேந்திரன், ஸ்ரீ முருகன் நிலையத்தின் தன் ஸ்ரீ தம்பிராஜா,மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள், இந்நாள் தலைவர்கள்……….. இப்படி இந்த பட்டியல் ஆய்வுக்கு எடுத்துகொண்டால் மிக நீண்டு கொண்டே போகும் அளவுக்கு இந்த அப்பாவி தமிழினத்தை படித்தவர்கள் ஏமாற்றி வயிறு வளர்கின்றனர்.இந்த புல்லுருவிககளை முதலில் நாம் கலை எடுக்க வேண்டும்.
இந்த பேராசிரியர் டத்தோ ஏன் எஸ். ராஜேந்திரனை பற்றிய ஒரு உண்மையை இங்கு பதிவு செய்கிறேன்.1984 ஆண்டுகளில் இவர் வந்தோ கல்லூரியில் பகுதி நேர வகுப்பை நடத்தி வந்தார்.அப்போது அவர் முழு நேரமாக MAKTAB PERGURUAN ILMU KHAS கல்லூரியில் MULU நேர விரி உரையாளராக பணியாற்றினார்.பணி பொறுப்பு ஏற்க வேண்டி கல்லூரியின் முதல்வரிடம் தனது கடிதத்தை கொடுத்தபோது அவர் சொன்னாராம் ” sudah jadi takdir sehingga anak keling boleh ajar lingustik melayu untuk orang – orang melayu “.இப்படி thanathu பெருமையை அவரே எங்களுக்கு பெருமையோடு சொன்னார்.ஆனால் இன்று அவரிடம் உண்மை இல்லை இவரும் அரசியல் தலைவர்களை போன்று ஏமாற்று பேர் வழிதான் என்றால் எப்படி மன்னிக்க முடியும்.
இதே போல் தான் ஸ்ரீ முருகன் நிலையத்தின் வாரியத் தலைவரான தன் ஸ்ரீ தம்பிராஜாவும்.1984 ஆம் ஆண்டு ஸ்ரீ முருகன் நிலையத்தின் ஆறாம் படிவ வகுப்புக்கு பதிவு செய்து கொண்ட நாள். பி.பி .ஏன் மாணவர் தங்கும் விடுதில் முதல் நாள் பத்தேக் சட்டையும் கையில் 555 சிகிரெட்டு பொட்டியுடன் ஒருவர் அங்கும் இங்குமாக அழைத்துக்கொண்டிருந்தார்.நாங்கள் அவரை பார்த்து கிண்டலும் கேலியும் செய்து கொண்டிருந்தோம்.பின்னர் பேராசிரியர் டாக்டர் தம்பிராஜா உரை என்ற அறிவிப்பு வந்த பொது தான் தெரிந்தது அவர் தான் இன்றைய தன் ஸ்ரீ தம்பிராஜா என்று.அவரது உரை மிகவும் உணர்வு புர்வமாக இருந்தது.உரையின் இடையில் திடிர் என்று தமிழில் பேசிய பொது அந்த மண்டபத்தில் இருந்த 60 பெரும் சிரித்து விட்டோம்.உடனே டாக்டர் தம்பிராஜா கடும் கோபம் வந்து விட்டது ஒ உங்களுக்கு தமிழ் மொழி கேவலமாகிவிட்டதா என்று எங்கள் மீது சிரிப் பாய்ந்தார் .நாங்களும் வெட்கி தலை குனிந்தோம் .
2999 ஆண்டு வாக்கில் டாக்டர் தம்பிராஜாவின் மகனை ஒரு முடி திருத்தும் நிலையத்தில் சந்தித்தேன்.அப்போது எனது ஆசிரியரின் மகன் என்ற பெருமையில் எப்படி அப்பா உங்கள் அப்பா இருக்கிறார் என்று கேட்டேன்.அதக்கு அவரது மகன் என்ன பதில் சொன்னான் தெரியுமா ” sorry uncle i can not speak tamil “. இதை காதில் கேட்டபோது பெரும் ஏமாற்றம் அடைத்தேன் .
இனி இந்த படித்தவர்களிடம் ஏமாறக்கூடாது என்று முடிவு செய்தேன்.
படித்தவர்கள் குறிப்பாக பல்கலைகழக பேராசிரியர்களில் எத்தனை பேர் தங்களது குழந்தைகளை தமிழ் பள்ளியில் சேர்த்துள்ளனர் என்பதை அவர்களே முன்வந்து அறிவிக்க வேண்டும்.இதே போல் தமிழ் பள்ளி ஆசிரியர்கள் 9000 பெரும் , 523 தலைமை ஆசிரியர்கள், இன்று நாட்டில் வெளி வரும் 6 தின சரிகளில் பணி யாற்றும் ஆசியர்கள், துணை ஆசிரியர்கள், நிருபர்கள், RTM தமிழ் செய்திப்பிரிவு , தமிழ் பிரிவு, THR ராக போன்றவர்கள் தங்களது குழந்தைகளை தமிழ் பள்ளிக்கு முதலில் அனுப்பவேண்டும். இவர்களுக்கு பிறக்கு இந்த ம இ கா தலைவரர்களை நாம் தோல் உரித்து சமுதயத்திக்கு அடையாளம் காட்ட வேண்டும்.
1. துன் வீ .தி .சம்பந்தன்
2. தன் ஸ்ரீ மாநிகவசகம்,
3. டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு
4. தன் ஸ்ரீ சுப்ரமணியம்
5. டத்தோ பத்மநாபன்.
6. தன் ஸ்ரீ பண்டிதன்.
7. டத்தோ சோதிநாதன்.
8. டத்தோ சரவணன்.
9. டத்தோ எஸ்.கே .தேவமணி.
10. டத்தோ ஸ்ரீ பழனிவேலு.
11. டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம்.
12. டத்தோ பாலகிருஷ்ணன் ஜோஹோர்
13. தன் ஸ்ரீ க.குமரன்.
14. தன் ஸ்ரீ வடிவேலு.
15. டத்தோ பஞ்சமுர்த்தி ipf
16. டத்தோ சம்பந்தன் ipf
17.அமரர் ஆதி குமணன்.
18.பெ.ராஜேந்திரன் மலேசியா எழுத்தாளர் சங்க தலைவர்.
19. முரளி, தமிழ் இளஞர் மணி மன்ற தலைவர்.
20.திரு துரைசாமி மலேசியா தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் தலைவர்.
21. 523 தமிழ் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்.
22. 9000 தமிழ் ஆசிரியர்கள்.
இப்படி பட்டவர்கள் உண்மையானவர்களாக இருந்தால் இந்த நாட்டில் தமிழுக்கு என்றுமே பங்கம் வராது தோழர் பொன். ரெங்கன் அவர்களே.தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று நாம் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.மேல் குறிப்பிட்டவர்கள் எப்படி தப்பித்து விடுகிறார்கள் தெரியுமா . நீங்கள் கூரிய தனி மனித உரிமை என்ற அயோக்கிய தனமான கூற்று தான்.தமிழிக்கும், தமிளினத்திகும் துரோகிகள் தற்போது அதிகமாகி விட்டனர்.இவர்களை தோல் உரிப்பது நமது கடமையாக கொள்வோம் வாரீர் என்று என்னோடு உங்களை ( தோழர் பொன். ரெங்கன் ) யும் அலைகிறேன் வாருங்கள் அருமை உடன்பிறப்பே.
தோழர் திரு .தெனாலி அவரகளே உங்கள் விமர்சனத்தை மிகச்சிறப்பாக பதிவு செய்தீர்கள். மனம் நொந்துப்போனேன். உணமைதான் ஆனால் மனிதன் மனமாற்றம் ராஜேந்திரனை உணரச செய்து இருக்கும். இன்றைய அவரின் சேவை மிகச சிறப்பாக உளது. அது அரசியல் காரணமாக இருந்தாலும் அதுவும் நமது உரிமைப படலம்தான்.
தம்பிராஜாவை ராஜேந்திரனுடன் ஒப்பிட வேண்டாம்.அவர் முருகனை வைத்து திறமையான மாணவர்களை மட்டும் வைத்து பக்தி படகாட்டி அரசிடம் இதுவரை 28 மில்லியன் வாங்கி சொகுசா உள்ளார். ஒரு வர்த்தக பதிவில் உள்ள ஸ்ரீ முருகன் நிலையம் ஒரு ROB நிறுவனத்துக்கு அரசியல் ஓலமிட இந்த வசதி.
இதுவும் சமுதாய வளப்பமா? அல்லது தனி மனித ஏப்பமா? என்று கேக்கலாம்! நம்மை காட்டிக கொடுத்த எட்டப்பன் என்று சிலர் பதிவு செய்வர். ஏமாற்றுபவன் இருக்கும் வரை ஏமாறுபவன் இருப்பான்.அதுவும் சமுதாய ஏழ்மையை வைத்து முதலீடும் செய்யும் கூட்டம் இப்போது நிறையவே வளர்ந்து வருகிறது.
ராஜேந்திரன் கணக்கில் கூட 50 மில்லியன் NGO கள் வசூலுக்கு வேலை நடக்கவில்லையாம்.நீங்கள் எழுதிய இரண்டாம் பதிவின் தமிழ் ஆர்வலர்கள் பட்டியலில் பலர் வசூல் கமுக்கு ஆசாமிகள் உள்ளனர்.
அரசாங்கம் வசூல் பட்டியலை வெளி இட்டால் ஒழிய இந்த ஜனனங்க்களை நாம் அடையலாம் காண முடியாது. இந்த வசூலுக்கு பதில் சொல்லமுடியாத பரிதவிப்பில் முனைவர் உள்ளார் என்பதும் தகவல்.
சமூகத்தை காட்டி அரசியல் தேர்தலை வைத்து சடுகுடு ஆட்டத்
தெரிந்த NGO தலைவர்கள் சிறப்பாக வாழ வழிக்கண்டு கொண்டனர்.நீங்களும் நானும் சமத்துவம் பேசி பொல்லாதவன் பட்டியலில் பரம எதிரியாக பிரகாசிகின்றோம். மீண்டும் தமிழ் வளர்ப்போம் தமிழனை மீட்டு எடுப்போம். நன்றி.
தெனாலி அவர்களே, தங்களின் குறிப்பு இவர்களை பச்சோந்திகள் என்று சொல்லாமலே சொல்லிவிட்டது. இவர்களில் எவனாவது இனி தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் பள்ளி மாணவர்கள் எங்கள் பிள்ளைகள் என்று எந்தக் கூட்டத்திலாவது பேசினார்கள் என்றால் George Bush – க்கு செருப்பு பறந்தது போல் பறக்க வேண்டும். அப்பொழுதுதான் இவர்களின் நாடகம் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட முடியும்.
மேலே காணப்பட்ட கனவான்கள் எல்லாம் தமிழன்களா ? இவர்களின் பேரப்பிள்ளைகள்
தமிழ்ப்பள்ளியில் படிக்கிறார்களா ? தமிழ் பேசுகிறார்களா ? இல்லை இவர்களெல்லாம்
சுத்த பச்சோந்திகளா ?
நன்றி தோழர் பொன் ரெங்கன் , தேனீ , சகோதரி நமிதா ஆகியோர்களுக்கு எனது மனம் மார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.நாம் அனைவரும் இனத்து இந்த துரோகிகளை அப்பாவி தமிளினத்திக்கு அடையலாம் காட்ட வேண்டும்.தமிழர்களுக்கு இப்போது தேவை படுவது உண்மையான தலைவர்கள்.மேலும் படித்தவர்களை நமது சமுதாயம் கண்முடி தனமாக பின்பற்றுகிரது.இதனால் தற்போது படித்தவர்கள் தான் அதிகமாக மோசடிக்காரார்களாக மாறிவருகின்றனர்.அரசியல் வாதிகள் ஒருபுறம் படித்தவர்கள் ஒருபுறம் இப்படி மோசடி பேர்வழிகளாக இருந்தால் , இந்த சமுதாயத்தை யார் காப்பாற்றுவது.
அரசியல் வாதிகளை மாற்றுவதக்கு வாக்கு சீட்டு போதும்.ஓரளவு இப்போது மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று வருகின்றனர்.ஆகையால் அரசியல் வாதிகளின் ஆட்டம் விரவிவில் ஒரு முடிவுக்கு வரும்.அதை நாம் கண் கூடாக பார்ப்போம்.
ஆனால் நம்மில் படித்தவர்களின் அயோக்கிய தனம் மிக வேகமாக அரசியல் வாதிகளுக்கு இடாக வளர தொடங்கி விட்டனர்.நம் நாட்டில் ஏறக்குறைய 12,000 வழக்கறிஞர்கள் இருப்பதாக வழக்கறிஞர் மன்றத்தின் பத்தி வேடு கூருகிராது .இதில் 33% சதவிகிதித்தினர் இந்தியர்கள் .அதாவது குறைந்தது 4,000 பேர்கள் இந்தியர்கள்.இதில் குறைத்தது 2000 பேர் தமிழர்கள்.இந்த 2000 பேரில் எத்தனை பேர் தங்களது குழந்தைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பி இருப்பார்கள் என்றல் நமக்கு ஏமாற்றமே மிச்சம். இதே போன்று மருத்துவர்கள் ( MBBS படித்த டாக்டர்கள் ), பொறியியல்லாளர்கள், கட்டிட கலைஞர்கள் ( AKITEK ) போன்ற பலத்துறைகளில் படித்த நம்மவர்களிடம் உண்மை இல்லை.பெரும்பான்மையான பட்டதாரிகளும் இதில் அடங்குவார்கள்.படித்தவர்களில் உண்மையானவர்கள் மிகக் சிலரே.
ஆகவே நமிடம் உள்ள அறிவு ஆற்றலை அப்பாவி தமிழனின் விடுதலைக்காக பயன் படுத்துவோம்.உண்மையை நிலை நாட்ட பாரா பட்சம் இன்றி நமது கருத்தை பதிவு செய்வோம்.நமது இந்த உண்மையான பணியால் கண்டிப்பாக இந்த சமுதாயத்தை காப்பாற்ற முடியும்.நம்புங்கள் நம்மால் முடியும்.இந்த சமுதாயத்தை காப்பாற்றுவோம் வாரீர் என்று இரு கரம் கூபி அழைக்கின்றேன் வாரீர்.
அனபர்களே இன்று 27/3/2014 மலேசிய நண்பன் வேவுகனை பக்கத்தை பாருங்கள் எத்தனை இந்தியர் NGO கள் அரசாங்கத்திடம் வசூல் செய்து ஏப்பம் விட்டது என்று தெரியும்.
தன் பிள்ளைகளை மாற்று பள்ளியில் சேர்த்துவிட்டு மேடையில் ஒரு தலைமையாசிரியர் பேசுது வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் . அந்த நேரத்தில் காலில் செருப்பு போடவில்லையே ……..
நீ செருப்பு போடலனா என்ன? பக்கத்துலே உள்ளவன் செருப்பும் பறக்கும்!முயற்சி செய்து பாரு! அதுக்கு எதாவது சாக்கு போக்கு
சொல்லாத!