எம்எச்370: ரேடாரின் பலவீனத்தை வெட்டவெளிச்சமாக்கியது

1masவானத்தில்  பறந்துகொண்டிருந்த  ஒரு  பெரிய  ஜெட்  விமானம் மலேசிய  ரேடார்  கருவிகளில்  பட்டு  விடாமல்  மாயமாய்  மறைந்து  விட்டது. விமானத்  தயாரிப்பில்  எவ்வளவோ  முன்னேற்றங்கள்  காணப்பட்டு  அதிநவீன  விமானங்கள்  எல்லாம்  வந்துவிட்டன.  ஆனால்  வேடிக்கை  என்னவென்றால், அவை  வானில்  பறப்பதற்கு  நிலத்தில்  உள்ள  பழைய  ரேடார்  கருவிகளைத்தான்  நம்பி  இருக்க  வேண்டியுள்ளது.

செயற்கைக்கோள்கள் வாழ்க்கையின்  ஒவ்வொரு  கட்டத்தையும்  மாற்றி  அமைத்து  வருகின்றன. ஆனால், விமானங்கள்  பறப்பதற்கு  ரேடாரையும்  தொடர்புக்கு  வானொலியையும்தான் அன்றும்  இன்றும்  நம்ப  வேண்டியுள்ளது. அதில் பறக்கும்  காலம்  தொடங்கி  அதிக  மாற்றங்கள்  இல்லை.

“ரேடார்கள்  அவ்வளவு  துல்லியமானவை  அல்ல. உலகம்  எவ்வளவோ  முன்னேறி  விட்டது”,  என்று  அமெரிக்காவில் உள்ள  செயற்கைக்கோள்  தொடர்பு  நிறுவனமான  ஏரியோனின்  தலைவர்  டோன்  தோமா.

“கார்களை  எங்கே  போய்க்கொண்டிருக்கின்றன,  பிள்ளைகள  எங்கிருந்து   கைபேசியில்  பேசுகிறார்கள் என்பதை  எல்லாம்  தெரிந்துகொள்ள  முடிகிறது. ஆனால்,  விமானங்கள்  கடலுக்கு உயரேயும்  தொலைதூரப்  பகுதிகளிலும்  பறக்கும்போது  அவற்றைக்  காண  முடிவதில்லை”,  என்றவர் ராய்ட்டரிம்  கூறினார்.

செயற்கைக்கோள்கள்தான்  இதற்கு  உதவ  முடியும்  என்கிறார்கள்  வல்லுனர்கள்.