பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில் நாட்டின் முதலாவது பெண் பிரதமராகலாம் என்று டிஏபி பெருந்தலைவர் லிம் கிட் சியாங் கூறியிருப்பதற்கு, அது பகல் கனவு என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி நறுக்கென்று பதிலளித்தார்.
இன்று காஜாங்கில் போலீஸ் அதிகாரிகளைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “அவர்கள் பகல் கனவு காணக் கூடாது ”, என்றார்.
நேற்று, காஜாங் வாக்காளர்களுக்கு எழுதிய ஒரு திறந்த மடலில், அவர்கள் மலேசியாவின் முதலாவது பெண் பிரதமராகப் போகிறவர் என்ற நம்பிக்கையில் வான் அசிசாவுக்கு வாக்களிக்க வேண்டுமாய் கேளாங் பாத்தா எம்பியுமான லிம் கேட்டுக் கொண்டிருந்தார்.
உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி. நீர் இன்னும் இருக்கிறீரா. எம்எச் 370 காணாமல் போன விசயத்தில் நீர் வாயை மூடிக்கொண்டுதானே இருந்தீர். இப்போது எப்படி வாயை திறந்தீர்?
இது உண்மை ஆகலாம்
இது உண்மையாக வேண்டும் அப்போதுதான் பிஎன் காரனுக்கு கொட்டம் அடங்கும்.
உள்துறை அமைச்சர் நல்ல உறக்கத்தில் இருந்து தலையில் இடி விழுந்தது போல் கனவு கண்டு எழுந்து உளறுகிறார் .
இப்படி பகல் கனவு கண்டு கொண்டு இருந்து கொண்டிருந்தால் பக்காதான் ராக்யாட் நிச்சயம் பலவீனம் படுமே தவிர புத்ரா ஜயாவை கை பற்ற முடியாது .அன்வாருக்கு பதில் தன் மனைவி என்றால் கே அடிலான் கட்சியை தனது குடும்ப கட்டு பாட்டில் நிலை நிறுத்த அன்வார் நினைத்து கொண்டு இருக்கிறரா ? ஏன் காலிட் இப்ராஹிமுக்கு பதில் வான் அஜிசானு சொல்ல வேண்டியதுதானே ?கே அடிலானில் தகுதி வாய்ந்த வேறு யாரும் இல்லையா ?முதலில் மதிய அரசாங்கத்தை கை பற்றும் முயற்சிக்கு முன்பு கை பற்றிய மாநிலத்தின் மக்களின் தேவைகளை முழுமையாக செயல் படுத்த நடவடிக்கையில் இறங்க வேண்டும் ,மாநிலத்தில் உள்ள குறை பாடுகளை முழுமையாக தீர்க்க மக்கள் கூட்டனி முழு வீச்சில் செயலில் இறங்க வேண்டும் .என்னுடைய பார்வையில் எதிரணி வென்ற மாநிலங்களில் இன்னும் தீர்க்க படாத பல விவகாரம் தலை விரித்தாடுகிறது .மற்றொன்று மத்தியில் அன்வார் இல்லை என்றால் அவரது மனைவியோ இல்லை மகளோ பிரதமர் வேட்பாளர் என்றால் ,அந்த கட்சியில் ஜனநாயகம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .தகுதி வாய்ந்த எத்தனையோ வேட்பாளர்கள் இருக்கும் பட்சத்தில் ,தன் கணவனும் மனைவியும் மாறி மாறி கட்சிக்கு தலைமை ஏற்பதும் ,அன்வார் இல்லையே அவரின் மனைவியே பிரதமர் வேட்பாளர் என்று முழங்குவதும் கட்சியின் ஜன நாயகத்திற்கு கேடு விளைவிப்பது மற்றும் இல்லாமல் கட்சியில் இருக்கும் இதர தலைவர்களுக்கு இளைக்கும் துரோக செயலாகும் .
வான் அஹ்சிசா பிரதமர் ஆனால் ஜஹெடி திரு ஓடுதான்
இன்றைக்கு எதிர் கட்சி பலமாக இருக்கிறது என்றால் அது PKR கட்சியை சாரும் என்பதை நினைவில் கொள்ளவும். நடுவண்
அரசாங்கமே எல்லா பணமும் கையாளுகிறது,எனவே மாநில அரசாங்கங்கள் தன் சக்திக்கு ஏற்பவே நடத்த வேண்டி இருக்கிறது.
மாநில பிரச்சனைகள் நிறைய பணம் இருந்தால் நிவர்த்தி செய்யலாம்
அரசியல் தெரியாமல் வேல் முருகன் எழுதுவது கோமாளிதனமாக
இருக்கிறது.
நமது அப்துல் கலாம் அவர்கள் கூரியது போல் நாம் காணும் கனவு ஒரு நாள் நிறை வேறும் அல்லவா…. பொறுத்திருந்து பாருங்கள்…
வேல் முருகன் அவர்களே… காலம் காலமாக பாரிசான் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் குறையே என்று சொல்ல வருகிறீர்களா? நடுவண் ஆட்சி எதிர் கட்சி கையில் இருந்தால்தான் அவர்கள் என்னென்ன சாதிக்கிறார்கள் என்பதை அளவிட முடியும்..
எதிர் கட்சியாய் செயல் பட்டால் சந்தோசம் ஆனால் பிரதமர் ஆக ஆசை பட்டு மக்களுக்கு வாதாடும் தன்மை இல்லாமல் போய்விட்டதே.நாராயண சித்தம்.