இன்று காலையில் தொடங்கிய காஜாங் சட்டமன்ற இடைத் தேர்தலில் 39,278 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இது ஒரு பல்லின தொகுதியாகும். முன்னதாக வாக்களிக்கும் தகுதி பெற்ற 1,188 வாக்காளர்கள் கடந்த புதன்கிழமை வாக்களித்து விட்டனர். எஞ்சியுள்ள 38,055 வாக்காளர்கள் இன்று வாக்களிப்பர்.
மொத்த வாக்காளர்களில் 80 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்கள் இந்த இடைத் தேர்தலில் வாக்களிப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.
2013 ஆண்டு பொதுத் தேர்தலில் பிகேஆர் இத்தொகுதியை கிட்டத்தட்ட 7,000 வாக்கு பெரும்பான்மையில் வென்றது. வெற்றி பெறுவார் என்று கூறப்படும் பிகேஆரின் வான் அஸிசா வான் இஸ்மாயில் இப்பெரும்பான்மையை அதிகரிப்பாரா என்று வினவப்படுகிறது.
பிஎன் வேட்பாளர் மசீசவின் சியு மெய் ஃபன் இத்தொகுதியின் 41 விழுக்காட்டு சீன வாக்காளர்களிடம் மசீசவின் செயற்திறனை நிரூபிக்க வேண்டியுள்ளது.
வாக்களிப்பு மாலை மணி 5 க்கு முடிவுறும். அதன் பின்னர் இத்தொகுதியின் 18 வாக்களிப்பு மையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள் காஜாங் முனிசிபல் கவுன்சில் ஸ்டேடியத்திற்கு கொண்டு வரப்படும்.
இன்று காலை மணி 7.00 லிருந்தே வாக்காளர்கள் பல்வேறு இடங்களில் காணப்படனர். அவர்களில் ஒருவர் சுங்கை சுவா புதிய கிராமத்தின் நுழைவாயிலில் ஒரு கட்டு கங்கோங் கீரையைப் பிடித்துக் கொண்டிருந்து பலரின் கவனத்தை ஈர்த்தார்.
அஹமட் என்று மட்டும் அடையாளம் காணப்பட்ட அந்த 64 வயதான பிகேஆர் ஆதரவாளர் பகாங்கிலிருந்து வந்து இங்குள்ள ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொண்டதாக கூறினார்.
“இங்குள்ள வாக்காளர்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சீனியின் விலை உயர்வுக்கு வழிவகுத்தார். ஆனால், கங்கோங் விலை குறைவாக இருக்கிறது என்று கூறியதன் வழி அவர் மக்களை இழிவுபடுத்தினார்.
“இதை நாம் இனிமேலும் அனுமதிக்க முடியாது”, என்று அவர் வலியுறுத்தினார்.
இத்தொகுதியின் பல்வேறு பகுதிகளில் பின் ஆதரவாளர்கள் அதிகமாகக் கூடியிருப்பது காணப்பட்டது.
ஓர் இடத்தில், பெர்காசா மற்றும் அம்னோ இளைஞர் பிரிவுகளின் தலைவர்களுடன் பல இளைஞர்கள் மோட்டார் சைக்களில் வந்திறங்கினர்.
இக்கூட்டத்தினர் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா மற்றும் பிகேஆர் இளைஞர் பிரிவு தலைவர் ரோஸான் அஸென் ஆகியோரை திருப்பிப் போகுமாறு கத்தினர்.
இதற்கு முன்னதாக, ஏன் பிஎன் சின்னங்களை கொண்டிருக்கும் பிஎன் கார்கள் வாக்காளர்களை வாக்களிப்பு மையங்களின் வாசல் வரையில் ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படுன்றது என்று ரோஸான் போலீசாரிடம் வினவிய போது சலசலப்பு ஏற்பட்டது.
இம்மாதிரியான சில சம்பவங்களுக்கிடையே வாக்களிப்பு சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது.
வெற்றியாளர் யார் என்பது இன்றிரவு மணி 9.00 வாக்கில் தெரிய வரும்.
எல்லா தில்லு முள்ளும் எதிர் பார்க்கலாம்- இப்படித்தானே கடந்த பொது தேர்தலில் ஆட்சியை தக்க வைத்து கொண்டான்கள்– அத்துடன் அம்னோ குண்டர்கள்/காவல் தே மு-க்கு சாதகமாக செயல் படும் – இதனால் எதுவும் நடக்கலாம். நீதியையே நம்பமுடியவில்லை பிறகு எப்படி மற்றவை?
எங்கள் வூா்களில் பெட்டி புரப்பட்டு டேவான் போகும்வரை தோடா்ந்து எஸ்கோட் சேய்வோம்.வோட் போடும் இடம் கண்காணிப்பில் இருந்தல் வோணும்.பயப்படாதீர் அங்கே பெர்காசாகாரன் இருப்பான்,யாா் மீதும் இந்துகக்கள் கைவைக்காதீர்,யாறும் நம் மீது கைவைக்க மாட்டான் அதை பெர்காசா 3லைன் காரன் பாா்துப்பான்.கலகம் வந்தா தமிழ் குண்டா்களால் தான் வரும்.பெட்டியை மாத்திவிட போரானுங்க வன்டிக்குள்ளே.இறைவன் அருள் இருப்பின் சாத்தியம்.வாழ்க நாராயன சித்தம்.
அம்னோவுக்கு இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது நன்றாகவே தெரியும். இருந்தாலும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று வீராப்பு பேசுவதற்காக மெஜாரிட்டி ஒட்டு விகிதத்தை குறைப்பதற்காக போராடிக் கொண்டிருகின்றது. இது நேற்றைய பெர்னமாவின் செய்தியே தன்னிலை விளக்கத்தைக் கொடுத்தது. தேர்தல் முடிவு இரண்டு தரப்புக்குமே ஒரே பெரிய அரசியல் தாக்கத்தை தர காத்திருகின்றது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
PR வென்றால் அது மக்கள் வெற்றி. BN வென்றால் அது பணத்தின் அதிகாரத்தின் தில்லு முல்லின் வெற்றி. மக்கள் வெல்வதுதான் விவேகம்.