பிற்பகல் மணி இரண்டு அளவில் 53.71 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர். கடந்த பொதுத் தேர்தலில் வாக்குச் சாவடிகள் மூடப்படும் வேளையில் 87 விழுக்காட்டினர் வாக்களித்திருந்தனர். குறைந்த எண்ணிக்கையிலான வாக்களிப்பு பிகேஆரை பாதிக்கும் என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
வாக்காளர்களை உடனடியாக வாக்களிக்க வருமாறு அன்வார் இப்ராகிம் டிவிட்டரின் வழி தொடர்ந்து டிவிட் செய்து கொண்டிருக்கிறார்.
வெற்றி பெரும் வாய்ப்பு எப்படி இருக்கிறது? வெற்றியை முன்கூட்டியே கூற முடியாது. ஆனால், இப்போதைக்கு தாம் ஆண்டவனுக்கு நன்றி உணர்வோடு இருப்பதாக பிகேஆர் வேட்பாளர் வான் அஸிசா வான் இஸ்மாயில் ஒரு கேள்விக்கு பதிலாக கூறினார்.
அதே வேலையில், அன்வார் இப்ராகிம் பிகேஆர் வெற்றி பெறும் என்பதில் நம்பிக்கையோடு இருப்பதாக கூறினார்.
பிஎன் ஆதரவாளர்களின் மோட்டார் சைக்கிள்களின் ஆரவாரமும் பிகேஆர் ஆதரவாளர்களின் சைக்கள் ஓட்டங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
இரு தரப்பினரும் ஆபாச வார்த்தைகளைக் கக்குவதில் தீவிரமக இருக்கின்றனர். பிகேஆர் உறுப்பினர்களை அமைதி காக்கும்படி வான் அஸிசா கேட்டுக் கொண்டார்.
மணி 1.10 அளவில் 47.24 விழுக்காட்டினர் அல்லது 17,977 வாக்காளர்கள் மட்டுமே தங்களுடைய வாக்குகளை அளித்துள்ளனர். வாக்களிப்பு முடிவடைவதற்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கின்றன.
இதனிடையே, எம்எச்370 சம்பந்தப்பட்ட விவகாரத்தில் கேஎல்எயில் ஒரு போமோ நடத்திய காட்சிகளைப் போன்ற நிகழ்ச்சி இங்கும் அரங்கேற்றப்பட்டது. அதனைக் கண்ட கெராக்கான் இளைஞர் பிரிவு தலைவர் சினமுற்றார். “முதிர்ச்சி ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது” என்று டிவிட் செய்துள்ளார்.
போலீசாரின் வேலை என்ன?
போலீசார் தேர்தல் குற்றங்கள் சட்ட விதிகளுக்கு முரணாக வாக்களிப்பு மையங்களில் கடமையில் ஈடுபட்டிருக்கும் போலீசார் மையங்களுக்கு வரும் வாக்காளர்களின் எண்ணிக்கையை குறித்து வைக்கின்றனர் என்று கோத்தா செராஸ் பிகேஆர் கட்சி ஊழியர் கிளமெண்ட் லோ கூறிக்கொண்டார்.
“போலீசாரின் வேலை பாதுகாப்பு அளிப்பது மட்டுமே. வாக்காளர்களின் எண்ணிக்கையை பதிவு செய்துகொள்வதல்ல. எத்தனை வாக்காளர்கள் வந்துள்ளனர் என்று வாக்களிப்பு மைய அதிகாரிகள் போலீசாரை கேட்கின்றனர். போலீசார் அவர்களின் குறிப்பு புத்தகத்தைத் திறந்து காட்டி அதில் குறிக்கப்பட்டிருக்கும் எண்ணிக்கையை காட்டுகின்றனர்.
“நான் படங்கள் எடுத்துள்ளேன். சாட்சியமும் இருக்கிறது”, என்று அவர் தொடர்பு கொண்ட போது கூறினார்.
வெற்றிப் பெற்ற வான் அஸிசா அவர்களுக்கு வாழ்த்துக்கள். செலாங்கூர் மாநில முதல் அமைச்சராக வர மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்.
வெற்றி திருமகள் வான் அஸிசா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் எதிர்பார்த்த முடிவே ,இருந்தாலும் செலங்கோர் மாநில முதல்வர் என்பதெல்லாம் அன்வாருக்கு விட்ட வழியே தவிரே அவர் மனைவிக்கு அல்ல என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் .அந்த முன்னால் சட்டமன்ற உறுப்பினரின் பதவி துறப்பு மிக பெரிய தியாகம் ,அது அன்வாருக்காக செய்த தியாகமே தவிர அன்வாரின் மனைவிக்கு அல்ல என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் . அவரை ஒரு சட்டமன்ற உறுபினராக மட்டுமே நிலை நிறுத்த வேண்டுமே தவிர மாநில முதல்வராக அல்ல .அன்வாருக்கு மட்டுமே அந்த கதவு திறந்து இருந்தது ,அது இல்லாத பட்சத்தில் கட்சியில் இன்னும் திறமையான தலைவர்கள் இருகிறார்கள் .வான் அசிசா அன்வாரின் கை பகையாக இருக்கிறார் என்ற பெயரும் ,குடும்ப அரசியல் என்ற அவ பெயருக்கும் இட்டு செல்ல கூடாது .காலிட் தொடர்ந்து மாநில முதல்வராக தொடர அனைவரும் ஒத்துளைப்பு தர வேண்டும் .
அடே வேல் முருக க்ஹலிட்… bn கூட கூட்டு சேர்ந்து நாடகம் ஆடுவது PKR க்கு தெரியுமடa …