மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தைத் தேடும் பணி இன்று 17வது நாளில் அடியெடுத்து வைக்கிறது. கில்லியன் புயல்காற்று வீசலாம் என்று அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் விமானங்களும் கப்பல்களும் இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் தேடும் நடவடிக்கையைத் தொடர்கின்றன.
நேற்று பிரான்ஸ் அதன் செயற்கைக்கோள் கடலில் சில பொருள்களைக் கண்டதாகவும் அவை விமானத்தைச் சேர்ந்த பொருள்களாக இருக்கலாம் என்றும் அறிவித்திருந்தது. ஆஸ்திரேலியாவு சீனாவும்கூட அதேபோன்ற அறிவிப்பை ஏற்கனவே செய்திருப்பதால் ஆஸ்திரேலிய கடல்பாதுகாப்பு ஆணையம், எம்எச்370 ஏற்றிச்சென்ற பொருள்களின் பட்டியலொன்றைத் தருமாறு மலேசியாவைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இன்று காலை சீனாவின் ஐஎல்-76 விமானம், இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் தேடலில் ஈடுப்பட்டிருந்தபோது “சந்தேகத்துக்குரிய பொருள்களை”க் கண்டதாக சீனாவின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஆனால், அப்பொருள்கள் பற்றி மேலதிக விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
Naan enna ninaikiren endral yaarukum entha piranchanai indri vara vendum…ellorum nalamaga tirumbuvargal ena valtuvom