அரசாங்கம் 2013ஆம் ஆண்டுக்கு மேலும் ரிம2.39 பில்லியன் கேட்டுக் கூடுதல் பட்ஜெட் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த ரிம2.39 பில்லியனில் பெரும்பகுதி, ரிம2 பில்லியனுக்கும் கூடுதலாக கருவூலத்துக்கு ஒதுக்கப்படும்.
அதற்கு அடுத்து ரிம55 மில்லியன் பொதுச் சேவைத் துறைக்கு, பொதுப்பணி அமைச்சுக்கு ரிம53 மில்லியன், தொடர்பு, பல்லூடக அமைச்சுக்கு ரிம47 மில்லியன் ஒதுக்கப்படும்.