புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காஜாங் சட்டமன்ற உறுப்பினரான பிகேஆரின் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், தம் கட்சியின் “காஜாங் திட்டம்” பலத்த சர்ச்சைக்குள்ளானாலும் அது ஒரு வெற்றியே என்று கூறினார்.
“இளம் வாக்காளர்கள் (எங்களுக்கு வாக்களித்தது) அந்த நம்பிக்கையைத் தந்திருக்கிறார்கள்.
“அதுதான் ‘காஜாங் திட்டத்தை’ வெற்றிபெற வைத்துள்ளது”. நேற்று வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து வான் அசிசா செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.
பிகேஆருக்கு மலாய்க்காரர் வாக்குகள் கூடுதலாகக் கிடைத்திருப்பதை எண்ணி திருப்தி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொது தேர்தலில் 7000,வாக்கு வித்யாசத்தில் வெற்றி அனால் இடை தேர்தலில் 6000 கும் குறைந்த எண்ணிக்கை வித்யாசம்,இதை வெற்றி என்பதா அல்லது என்ன வென்பது.மற்றும் வாக்களிக்க வந்தவர் % சரிவு எதை பிரதிபலிக்கிறது.30,000,மக்கள் வந்திருப்பார் மற்றவர்கல் எங்கே?நரையான சித்தம்.
உண்மை என்னவென்று தெளிவாக மக்கள் சொல்லிவிட்டனர்… பி என் ஆட்சியை மக்கள் புறக்கணிக்கின்றனர் என்பதே இந்த தேர்தல் முடிவு தெளிவுபடுத்துகிறது.