கொரியா சென்ற எம்ஏஎஸ் விமானம் மின்சாரக் கோளாற்றினால் ஹாங்காங்கில் இறங்கியது

masதென்  கொரியாவின்  இஞ்சியோனை  நோக்கிப்  பயணம்  செய்துகொண்டிருந்த  மலேசிய  விமான  நிறுவனத்தின் (எம்ஏஎஸ்)  ஏ-330-300  ஏர்பஸ்  விமானத்தில்  “மின் ஆக்கி செயலிழந்ததால்”  அது  ஹாங்காங்கில்  அவசரமாக  தரை  இறங்கிற்று.

இதை  உறுதிப்படுத்திய  எம்ஏஎஸ் தரையிறங்கியதில்  “பிரச்னை  எதுவுமில்லை”  என்றது.

மின்னாக்கிதான்  விமானத்துக்கு  மின்சாரத்தை  விநியோகிக்கிறது.

“ஆனால், துணை மின் உற்பத்திக்  கருவி  தொடர்ந்து  மின்சாரத்தை  வழங்கிக்  கொண்டிருந்தது”  என்றது  கூறியது.

நேற்றிரவு  11.45க்கு  கோலாலும்பூரிலிருந்து  புறப்பட்ட  அவ்விமானம்  இன்று  காலை  மணி  6.50க்கு  இஞ்சியோன்  சென்றடைந்திருக்க  வேண்டும்.

“அதிலிருந்த 271  பயணிகளும்  வேறு  விமானங்களில்  அனுப்பி  வைக்கப்பட்டனர்”.