காஜாங் வெற்றியால் அரசின் கட்டமைப்பு மாறாது

khalidநேற்றைய  இடைத்  தேர்தல்  வெற்றி   “காஜாங்  திட்டத்தின்”  வெற்றி  எனப்  போற்றப்பட்டாலும் காலிட்   இப்ராகிமைப்  பொறுத்தவரை  அதனால்  தம்  மந்திரி  புசார்  பதவிக்கு  ஆபத்து  ஏதுமில்லை  என்றே  நம்புகிறார்.

இடைத்  தேர்தலில்  வென்ற  பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  தம்மை  ஆதரிப்பவர்  என்பதும் அவரின்  கணவர்  அன்வார்  இப்ராகிமைப்போல்  அஸ்மின்  அலியை  அதரிப்பவர்  அல்ல  என்பதும்தான்  காலிட்டுக்கு  இந்த  நம்பிக்கையைக்  கொடுத்துள்ளது.

வான்  அசிசாவின்  வெற்றியைப் பாராட்டிய  காலிட்,  அது  பிகேஆரின்  சீரமைப்புத்  திட்டத்துக்குக்  கிடைத்த வரம்  என  வருணித்தார்.

ஆனால், “அரசாங்கக்  கட்டமைப்பிலும்  செயல்பாட்டிலும்  மாற்றமிராது”  என்பதையும்  அவர்  வலியுறுத்தினார்.

மலாய்க்காரர்களிடமிருந்தும்  இளைஞர்களீடமிருந்தும்  பிகேஆருக்குக்  கூடுதல்  வாக்குகள்  கிடைத்திருப்பதால்  அதை “இனிப்பான  வெற்றி”  என்றவர் குறிப்பிட்டார்.