மகாதிர்: 2020க்குள் மலேசியா உயர்-வருமான நாடாக மாறும்

dr mஇப்போது  நடுத்தர-வருமான  நாடாக  உள்ள  மலேசியா  2020க்குள்  உயர்-வருமானம்  பெறும் நாடாக  மாறுவது  திண்ணம்  என்கிறார்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.  மலேசிய  அரசாங்கம்  அதற்காக  விரிவான  திட்டங்களைப்  போட்டு  அவற்றை  ,முறையாகச்  செயல்படுத்தி  வருவதாக  அவர்  சொன்னார்.

நேற்று,  காட்மண்டுவில்  நேப்பாள்  வணிகர்களிடையே  உரையாற்றிய  மகாதிர்  தம்  பதவிக்காலத்தில்  மேற்கொள்ளப்பட்ட  மேம்பாட்டுத்  திட்டங்களை  விவரித்தார்.

“சொல்லப்போனால்.  நான்  அல்ல,  மலேசியாவை  நிறுவியர்கள்தாம்  நாட்டின்  மேம்பாட்டுக்கும்  நவீனமயத்துக்கும்  தொழில்மயத்துக்கும்  வழிமுறைகளை  அமைத்தவர்கள். நான்  அதை  அப்படியே  பின்பற்றினேன்”,  என்று  கூறியவர்  மலேசியாவின்  தொடக்கக்  காலக்  கொள்கைகளையும்  விளக்கினார்.

மலேசியா  சுதந்திரம்  பெற்றபோது 50  விழுக்காட்டு  மக்கள்  ஏழைகளாக  இருந்தனர்.  அவர்களை  ஏழ்மை  நிலையிலிருந்து  உயர்த்த  நிலைத்தன்மை, சமூக  நல்லிணக்கம்  ஆகியவற்றிலும்  அரசியல்  அதிகாரம்,  பொருளாதார  வளங்கள்  ஆகியவற்றைச்  சமமாக  பகிர்ந்துகொள்வதிலும்  கவனம்  செலுத்தப்பட்டது.

நாடு  மேம்பாடடையவும்  தொழில்மயமாவதற்கும்  அடிப்படையாக  அமைந்த  இன்னொன்று  கல்வியாகும்  என்றார்  மகாதிர். மலேசியா  அதன்  மக்கள் கல்விகற்க  எல்லா  வாய்ப்புகளையும்  ஏற்படுத்திக்  கொடுத்தது  என்றாரவர்.