தி கியாட்: காஜாங்கில் கடும் தோல்வி என்பதை மசீச ஒப்ப வேண்டும்

ong-tee-keatமசீச, நேற்றைய காஜாங் இடைத் தேர்தலில் சீனர் ஆதரவு ஓரளவு கூடுதலாகக் கிடைத்ததை ஒரு வெற்றி எனக் காண்பிக்க முயன்றாலும் உண்மையில் அது ஒரு “கடும் தோல்விதான்” என்ற உண்மையை கட்சித் தலைவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என அதன் முன்னாள் தலைவர் கூறியுள்ளார்.

அதிக செலவையும் கடும் தோல்வியையும் கொண்டுவந்தது என்பதைத் தவிர, இடைத் தேர்தல் பற்றிப் பெருமையாக சொல்லிக்கொள்ள எதுவுமில்லை என்று ஒங் தி கியாட் கூறினார்.

“ஒரு மசீச உதவித் தலைவர், அதிலும் மசீச தலைவரின் சலுகைகளைப் பெற்றவர் 16 வாக்களிப்பு வட்டாரங்களில் 14-இல், அதுவும் 13வது பொதுத் தேர்தலில் வென்ற இடங்களிலும் முன்பு ‘நம் கோட்டைகளாக’ விளங்கிய இடங்களிலும் தோல்வியுற்றது ஏன் என்பதை நாம் ஆராய வேண்டும்”, என்றாரவர்.

மசீச-வினர் “மறுக்கும் மனப்ப்பான்மையை”க் கைவிட வேண்டும் என்று வலியுறுத்திய ஒங், “தேர்தலில் மசீசவின் அடைவுநிலை குறித்து ஒரு பின்னாய்வு” செய்ய வேண்டும் என்றார்.