எம்எச்: பெய்ஜிங்கில் பயணிகளின் குடும்பத்தார் போலீசுடன் மோதல்

beijingகாணாமல்போன  மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370  விமானத்தில்  பயணித்தவர்களின்  குடும்பத்தார்,  மலேசிய  அரசாங்கமும் விமான  நிறுவனமும்  நடந்தது என்னவென்பதை  விளக்க  வேண்டும்  என்று  கோரி  பெய்ஜிங்கில் உள்ள  மலேசிய  தூதரகத்தை  முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டம்  செய்தபோது  அவர்களுக்கும்  போலீசுக்குமிடையில்  மோதல்  நிகழ்ந்தது.

தூதரகத்தைச்  சுற்றி  மனிதச்சுவர்  போல்  நின்று  பாதுகாப்பளித்துக்  கொண்டிருந்த  போலீசார்மீது  அவர்கள்  தண்ணீர்  போத்தல்களை  விட்டெறிந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களில்  பலர்  போலீசாரால்  பின்னுக்குத்  தள்ளப்பட்டனர். அந்த  அமளியில் ஒரு  பெண்மணி  மயக்கமடைந்தார். அவரைத்   தூக்குப்படுக்கையில் அங்கிருந்து  துக்கிச் சென்றார்கள்.