வான் ஜுனாய்டி: பாலியல் வல்லுறவு பற்றிய கருத்துகளை நாடாளுமன்றப் பதிவேட்டிலிருந்து நீக்குக

wan  junபாலியல்  வல்லுறவை  மலாய்க்காரர்-அல்லாதார்  பெரிய  குற்றமாகக்  கருதுவதில்லை  என்றுரைத்து  சர்ச்சையை  உண்டாக்கிய  உள்துறை  துணை  அமைச்சர்  வான்  ஜுனாய்டி  வான்  ஜாப்பார்,  தம்  கருத்தை நாடாளுமன்றக்   பதிவேட்டிலிருந்து  நீக்க  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டார்.

அக்கருத்து  சிலரின்  மனத்தைப்  புண்படுத்தி  இருக்கலாம்  என்பதை அவர்  ஒப்புக்கொண்டார்.   ஆனாலும்,  அதற்காக  அவர்  மன்னிப்பு  கேட்கவில்லை.

அவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா  அவரது  கோரிக்கையை  ஏற்றுக்கொண்டார்.

இனவாத  கருத்தைத்  தெரிவித்தற்காக  அவரை  உரிமைகள்  மற்றும் சலுகைகள்  குழு  விசாரணைக்கு  அனுப்ப  வேண்டும்  என  சொங்  ச்சியன்  ஜென் (டிஏபி- பண்டார்  கூச்சிங்)  தீர்மானம்  கொண்டு  வந்தபோது  வான்  ஜுனாய்டி  அவ்வாறு  கேட்டுக்கொண்டார்.

“ஒருவேளை  நான்  அதிகப்படியாக  பேசி  இருக்கலாம்.  ஆனால்,  நான்  ஓர்  இனவாதி  அல்ல.  என்  மனைவிகூட  சீனர்தான்”,  என்று  வான்  ஜுனாய்டி கூறினார்.