கொந்தளிக்கும் இந்தியப் பெருங்கடலிலிருந்து விமானி அறையின் ஒலிப்பதிவுக் கருவியைத் தேடி எடுத்தாலும்கூட எம்எச்370 விமானத்தைச் சூழ்ந்துள்ள மர்ம முடிச்சை அவிழ்க்க முடியுமா என்பது சந்தேகமே.
ஒலிப்பதிவுக் கருவி இரண்டு மணி நேரப் பேச்சை மட்டுமே வைத்திருக்கும். முந்திய ஒலிப்பதிவுகளை அழித்துவிட்டு புதியதை அது ஒலிப்பதிவு செய்யும்.. தாய்லாந்து குடாக் கடலுக்கு உயரே பேசப்பட்டது, ரேடார் கருவியிலிருந்து மறையுமுன்னர் நடைபெற்ற உரையாடல்கள் எல்லாம் அதில் இருக்காது, அதனால், அப்போது என்ன நடந்தது என்பதை அறிய முடியாமலே போய்விடலாம் என விமானப் போக்குவரத்து வல்லுனர்கள் கருதுகின்றனர்.
விமானம் எதற்காக பயணப் பாதையை விட்டுத் திரும்பியது என்பதை அறிய இந்த ஒலிப்பதிவுக் கருவி உதவும் எனக் கருதப்படுகிறது.
மர்மம்! மர்மம்! அனைத்தும் மர்மமாக இருக்கிறது. எப்படியிருந்தாலும் ஒரு நாள் மர்ம முடிச்சு அவிழ்க்கப்படும் என நம்புவோமாக!
ஒரு நாள் மர்ம முடிச்சு அகலும் என நம்புவோமாக. அதுவரை பொறுத்திருப்போம். நடக்கக்கூடாதது நடந்துவிட்டது.என் செய்வது?
வலிக்கிறது இதயம்
ஒலிப்பதிவுக் கருவி கிடைக்க கூடாது என்று எத்தனை BN எருமைகள்
” DOA ” செய்கின்றனவோ ???
காணமல் போனவர்கள் திரும்பவும் கிடைப்பார்கள் என்று உறுதியாக நம்புவோம் ..நான் மனிதர்களையும் நம்பள இப்ப இவனுங்க காற்ற பொயும் பித்தலாடையும் நம்ப தயாராக இல்லை .என்னை படைத்த தேவனை நம்புகிறேன் ..அவர்கள் உயிரோட இருப்பார்கள் என்று.
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பேச்சி ..ஏன் இப்படி சொதப்பனும் ..?
முதல்ல இந்த கருப்பு பெட்டி கிடைத்தால் எல்லாம் உண்மைகள் வெளிவரும் என்றும் இப்ப தகவல்கள் முழுமையாக கிடைக்காதுன்னு சொன்னா எப்படி ..? எல்லாம் விசயங்களும் இப்படி மறைத்து வைத்து என்னத்த சாதிக்க போறாங்க ..ஒரு பொய்ய மறைக்க மறுபடியும் இன்னுரு பொய்யா ..? உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லையென்றும் சொல்.. இதற்கு மிஞ்சினதை தீமையே உண்டாகும் ..!!