மூன்று பிகேஆர் தலைவர்களுக்கு சரவாக்குள் நுழைய அனுமதி மறுப்பு

pkrபாலிங்கியான்  இடைத்  தேர்தல்  பரப்புரைக்காக  சென்ற  மூன்று  பிகேஆர்  தலைவர்கள்  இன்று சிபு  விமான  நிலையத்தில்  தடுத்து  நிறுத்தப்பட்டனர்.

காலை  மணி  11-க்கு, சிபு  சென்றடைந்த  கட்சித்  தலைமைச்  செயலாளர்  சைபுடின்  நசுதியோனிடம்  அவர்  சரவாக்கில்  அடியெடுத்து  வைப்பதை  முதலமைச்சர்  அலுவலகம்  தடை  செய்திருப்பதாகக் கூறப்பட்டது  என  பிகேஆரின்  அறிக்கை  ஒன்று  கூறியது.

பகலில்  அங்கு  சென்ற  பிகேஆர்  வியூக  இயக்குனர்  ரபிஸி  ரம்லியும்  உதவித்  தலைவர்  தியான்  சுவாவும்  அதேபோல்  தடுத்து  நிறுத்தப்பட்டனர். பின்னர்  மூவரும்  திருப்பி  அனுப்பப்பட்டனர்.

“ஜனநாயகத்துக்கு  எதிரான  இச்செயலுக்கு  பிகேஆர்  கடும்  கண்டனம்  தெரிவிக்கிறது”, எனக் கட்சியின்  தொடர்பு  இயக்குனர்  பாஹ்மி  பட்சில்  கூறினார்.

“புதிய  முதலமைச்சர்  வந்துவிட்டாலும்கூட  தாயிப்  முகம்மட்டின்  இரும்புப்  பிடியின்  தாக்கம்  இன்னமும்  பரவலாக இருப்பதையே  இது  தெளிவாகக்  காட்டுகிறது.  இது  சரவாக்கில்  ஜனநாயக வளர்ச்சிக்கு  உதவாது”,  என்றாரவர்.