‘லியோ போக்குவரத்து அமைச்சராக இருந்திருந்தால்…..’

ongஎம்எச்370 விமானம்  காணாமல்போனதால்  ஏற்பட்ட நெருக்கடியை  இடைக்காலப்  போக்குவரத்து  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்  திறமையாகக்  கையாள்வதாக  முன்னாள்  போக்குவரத்து  அமைச்சர்  ஒங்  தி  கியாட்  பாராட்டியுள்ளார். அதேவேளை,  மசீச  தலைவர்  லியோ  தியோங்  லாயை  மறைமுகமாக  குத்திக்காட்டவும்  அவர்  தவறவில்லை.

“நல்ல  வேளையாக  ஹிஷாமுடின்  போக்குவரத்து  அமைச்சராக  இருக்கிறார்…… பன்னாட்டு  ஊடகங்களை  நன்கு சமாளிக்கிறார்,  நன்றாக  பேசுகிறார். அவருடைய இடத்தில்  பேசும்  திறமையற்ற  வேறு  யாரும்  இருந்திருந்தால்  நிலைமை  மோசமாக இருக்கும்”,  என்று  ஒங்  கூறினார்.

லியோவைப்  பெயர்  குறிப்பிடவில்லையே  தவிர,  ஒங்  அவரை  மனத்தில் வைத்துதான்  அப்படிச்  சொன்னார்  என்பது  தெளிவு.  லியோ-வுக்கு  ஆங்கிலப்  பேச்சு  அவ்வளவாக  வராது. அடிக்கடி இடறி  விழுவார்.