ஏர் ஏசியாவின் சரக்கு ஏற்றிச்செல்லும் விமான நிறுவனமான ஏர் ஏசியா X, காணாமல்போன விமானத்தைத் தேடும் பணி குறித்து இணையத்தில் கருத்துத் தெரிவித்த அதன் விமானி ஒருவரைத் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.
“ஏர் ஏசியா X-இன் அந்த மூத்த அதிகாரி, முகநூலில் பதிவிட்டதன்வழி நிறுவனக் கொள்கைகளை மீறினார் என்பதால், அவர்மீதான விசாரணை முடியும்வரை இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்”, என குழும தலைமை செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ் ட்விட்டரில் கூறினார்.
ஏர் ஏசியா X-ஐத் தொடர்புகொண்டு பேசியதற்கு, அவ்விவகாரம் பற்றி மேலதிக விவரங்கள் தெரிவிப்பதற்கில்லை என்று கூறி விட்டது.
சரியான பாடம் .
சரியான பாடம் .அவனை விசாரனை பண்ணுங்க
விமானம் விபத்தில் இருக்கும் போது அதனைப் பற்றி சக விமானி நக்கல் அடிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. பணிநீக்கம் சரியே!
அவர் என்ன சொன்னார் என்று தெரியாமல் கருத்து சொல்லவது சரி இல்லை ! பெரும்பாலும் மலேசியாவில் லாஜிக்கா சொன்னா யாருக்கும் பிடிக்காது ! டோனி பெனாண்டசுக்கு உண்மையை சொன்னால் பிடிக்காதோ ? என்ன செய்வது அவருடைய பொழப்பும் நடக்குனும்ல !
தான் ஸ்ரீ, நீங்கள் முன்பு மாஸ் வருமான இழப்பீட்டைப்பற்றி குறை கூறி இருந்தீர்களே அதுமட்டும் நியாயமாகுமா??? மக்கள் வரிப்பணம் என்ற நோக்கத்தில் நீங்கள் குறை கூறுவது எப்படி சரியோ அதைப்போல்தான் இந்த விமானி சொன்னதும். இந்த விமானி சொன்னதைத்தான் இந்த உலகமே சொல்கிறதே! இந்த விமானி புதிதாக ஒன்னும் சொல்லவில்லையே!!!!!!. எஸ் ஒ பி வேறு மாற்று கருத்து தெரிவிப்பது வேறு என்பதை அறிவீர்!!!!