மலேசிய தேசிய விமானப் பயணப் பணியாளர் சங்கம் (நுபாம்) எம்எச் பேரிடர் தொடர்பில் மலேசிய விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஹ்மட் ஜவுஹாரி யாஹ்யா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
தொழிலாளர் விவகாரங்கள் தொடர்பில் அஹ்மட் ஜவுஹாரியுடன் நீண்ட காலமாகவே பல மோதல்களில் ஈடுபட்டு வந்துள்ள நுபாம், அவருடைய பதவி விலகல் மக்களுக்கு விமானப் போக்குவரத்துமீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று கூறியது.
“அவர் பொறுப்பில் இருந்தபோதுதான் அந்த 370 விமானப் பயணம் துயரத்தில் முடிந்தது என்பதால் அவர் விலகி மற்றொருவருக்கு அப்பதவியைக் கொடுப்பதுதான் முறையாகும்”, என நுபாம் ஓர் அறிக்கையில் கூறிற்று.
சரியான முடிவு…தலைமை செயல் அதிகாரி பதவி விலக வேண்டும்.விமான பயணிகளின் இறப்பிற்கு இவரின் பதவி விலகல் நல்ல முன்னுதாரணம்.சம்பந்த பட்ட குடும்பதினருக்கு அதுவே ஆறுதல்..
இது சரியான முடிவல்ல!முதலில் தவறு எங்கு நடந்தது என்று ஆராய வேண்டும்,பிறகு தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்,யார் பதவி துரக வேண்டும் என்று.திமிங்கலத்துக்கு நெத்திலி இரையாக கூடாது.எது செய்தாலும் கவனமாக செய்ய வேண்டும்.
விலக வேண்டும் என்பது சரி. ஆனால் யூனியன் தலைவரோடு மோதல் அதனால் விலக வேண்டும் என்பது சரியல்ல! இந்த விபத்து மட்டும்மல்ல மாஸ் நஷ்டத்தில் ஓடுவதற்கும் அவர் பொறுப்பேற்க வேண்டும்.
முதலில் mas உள்ள 26 வகை யூனியன்களை ஒழிக்க படவேண்டும் ! சில அம்னோ டிவிஷன் தலைவர்கள் உயர் பதவியில் அங்கு வேலை செய்வதாக கேள்வி ! யூனியன் தகராறு காலத்தில் பல விமான சேவைகள் சரியாக செயல்படவில்லை ! புறப்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் விமானம் தரை இறங்கிவிடும் !