காணாமல்போன சொத்துக்கள் பற்றி போலீசின் விளக்கம் ஏற்கப்பட்டது

polisதலைமைக்  கணக்காய்வாளர்  அறிக்கையில்  குறிப்பிடப்பட்டிருந்த காணாமல்போன  போலீஸ்  சொத்துக்கள்  பற்றி  போலீசார் கொடுத்த  விளக்கத்தால்  நாடாளுமன்ற  பொதுக்  கணக்குக்  குழு (பிஏசி)  “திருப்தி அடைந்துள்ளது”.

இன்று   பிஏசி-இன்  கூட்டத்துக்குப்  பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசிய  பிஏசி  தலைவர்  நூர்  ஜஸ்லான்   முகம்மட்,   போலீஸ்  படையின்  சொத்துக்கள் காணாமல்போகும்  விவகாரத்தைக்  கவனிப்பதாக  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கரே  “பொறுப்பேற்றுக்  கொண்டிருப்பதாக”க்  கூறினார்.

போலீஸ்  சொத்துக்கள்  காணாமல்  போனதாக  கணக்கறிக்கையில்  தெரிவிக்கப்பட்ட  விவகாரம்  பரவலான  கவனத்தைப்  பெற்றிருந்தால்,  அது  பற்றி  விளக்கமளிக்க  காலிட்டே  இன்று  பிஏசி  கூட்டத்தில்  முன்னிலை  ஆனார்,

“போலீசார் பல்லாயிரக்கணக்கான  துப்பாக்கிகளைப்  பயன்படுத்துகிறார்கள். இது   விசாரணை  மேற்கொள்ளும்  அளவுக்கு (பெரிய இழப்பு) இல்லை”,  என்று  காலிட்  கூறினார்.

159  கைவிலங்குகள்,  49  துப்பாக்கிகள்,  29  வாகனங்களைக்  காணவில்லை  என  கணக்கு  அறிக்கை  கூறியது.