மலேசியாவில் தேர்தல் தொகுதிகள் திருத்தி அமைக்கப்படுவதைக் கண்காணிக்க பிரிட்டனின் தொகுதி எல்லை நிர்ணய ஆணையம் போன்ற ஒன்று உருவாக்கப்படுவதை பக்காத்தான் ரக்யாட் குழு ஒன்று ஆதரிக்கிறது.
தேர்தல் ஆணையத்தில் “நேர்மையும் சுதந்திரமும் இல்லாதிருப்பதால்” அப்படி ஓர் அமைப்பு தேவைதான் என அந்தத் தொகுதி நிர்ணய குழு அறிக்கை ஒன்றில் கூறியது.
அந்த அறிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹட்டா ரம்லி( பாஸ்- கோலா கிராய், ), மன்சூர் ஒஸ்மான் (பிகேஆர்- நிபோங் தெபால்), ஒங் கியான் மிங்( டிஏபி- செர்டாங்) ஆகியோர் கையொப்பமிட்டிருந்தனர்.
“முன்னாள் இசி தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான், அரசமைப்புக் கொள்கைகளின்படி அல்லாமல் மலாய்க்காரர் அதிகாரத்தை நிலைநிறுத்தும் வகையில் முன்பு தொகுதி எல்லைகள் திருத்தி அமைக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டிருப்பதே இசி நடுநிலையாகவும் நேர்மையாகவும் செயல்படும் என்பதை நம்ப முடியாது என்பதை உறுதிப்படுத்துகிறது”, என்றவர்கள் கூறினர்.
இன்று ……..
நேர்மையானவர்களை
பார்பதே சிரமம் !!
தேர்தல் ஆணையம்
நியாயமாக ….
நடந்துக் கொள்ளுமா ??