தென் இந்தியப் பெருங்கடலில் காணாமல்போனதாக ஊகிக்கப்படும் மலேசிய விமான நிறுவனத்தின் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த விமானங்கள் அனைத்தும் திருப்பி அழைக்கப்பட்டிருக்கின்றன.
அப்பகுதியில் கடலில் கொந்தளிப்பு மிகுந்திருப்பதாகவும் எதையும் பார்ப்பதற்கே சிரமமாக இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“அங்குள்ள விமானங்கள் எல்லாம் திரும்பி வருகின்றன. மேற்கொண்டு தேடும்பணி இரத்துச் செய்யப்பட்டுள்ளது”, என அமெரிக்கக் கடல்படை அதிகாரி லெப்டனண்ட் கமாண்டர் ஏடம் ஷ்காண்ட்ஸ் ராய்ட்டரிடம் தெரிவித்தார்.
வானிலை மோசாமாக இருப்பதால் விமானங்களின் தேடும்பணி இரத்துச் செய்யப்பட்டதை ஆஸ்திரேலிய கடல்பாதுகாப்பு ஆணையமும் உறுதிப்படுத்தியது.
அல்தான்துயா சீற்றம் கொண்டு கடல் அலையாய் மாறி
இப்படியெல்லாம் மலேசியாவை சோதனை செய்யலாமா ???
எங்கே நமது பிரதமர் ” அலையே கடல் அலையே… நீ உருகாதே …
மனம் வருந்தாதே … ” என்று பாடி அல்தான்துயாவை மனம் குளிர வைக்க முயற்சி செய்யலாமே.
கடவுள் மனிதனை
பறக்க பழக்கி இருந்தால்
பகலில் பறந்து
இந்து மா கடல் கடந்து
இந்த உலகை ஆண்டு
சூரியனை முத்தமிட்டு
தவிக்கும் உயிர்களை
மீட்டு இருக்கலாம்
கொக்காய் குருவியை
கழுகாய் பீனிக்ஸ் பறவையாய்
பார் முழுக்க சிறகடித்து
எண்ணெய் இல்லாமல்
உங்களை என்னுள்
வைத்து இருப்பேன்
கடவுள் மாறவேண்டும்.
“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்று கண்ணதாசன் சொன்னது இன்று தப்பா போச்சோ? மனிதன் மாறி விட்டான். மனிதனை மாற வைத்தவன் மண்ணுலகில் இருக்க, விண்ணுலகில் இருக்கும் வேந்தனை மாற வேண்டும் என்பது ஏனோ அரங்கநாதா?
மின்னல் fm – மில் பிற்பகல் 2-3 வரை சோக பாடல்கள் ஒலியேறி
கொண்டிருக்கிறது. கேட்டு இன்புறுங்கள்.
வானிலை சீரடைந்தவுடன் தேடும் பணி தொடரவேண்டும். இப்பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் கடவுள் அருள் பெற்றவர்கள்.
இந்த THR Raga-வும், மின்னல் FM -மும் செய்யும் அட்டகாசத்துக்கு அளவே இல்லமால் போய் விட்டது. இது ஒரு விபத்துச் செய்தி. அதை அவ்வாறே காண்பது தகவல் ஊடகங்களுக்குச் சிறப்பு. அதை விட்டு ஏதோ ஒரு நோக்கைத்தை வைத்துக் கொண்டு மக்களின் கவனத்தைத் திருப்பும் நோக்கமாகவே செய்வதானால் செய்யுங்கள். வானொலியை அடைத்து விட்டு, அடுத்து இணையத்தில் இருக்கும் மற்ற வானொலிகளுக்கு மக்கள் திசை திரும்பி விடும். பால் புளிச்சிப் போச்சுப்பா. இதற்க்கு மேல் இந்த நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தால் மக்கள் இரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இப்பொழுதே எல்லா வீடுகளிலும் இலவு ஓசை வேண்டாம் என்று அடைத்து வைத்திருக்கின்றார்கள்.
இலங்கை முல்லிவாய்கால் இறுதி போரில் இறந்த 40ஆயிரம் தமிழருக்காக ஒரு சோக பாடலையும் மின்னல் fm , thr ragaa போடவில்லை என்பது சோகமான செய்தி ! thr ragaa உதயாவின் கவிதை கேட்டு கடுப்பு ஏறி விட்டது !
அநியாயமாக ஒருவர் இறந்தாலும், ஆயிரம்பேர் , இலட்சம்பேர் இறந்தாலும் உயிரை மதிப்பவர்களுக்குத் துன்பம் ஒன்றுதான். உயின் மதிப்பு எண்ணிக்கையைக் கொண்டல்ல;உணர்வைக் கொண்டது. ஈழத்தில் இலட்சம் அப்பாவி மக்களின் உயிர்களை திட்டமிட்டே இனழிப்பு செய்ததை எத்தனை நாடுகள் அந்த உயிர்களை மதிக்காமல் கொலைக்கார அரசுக்கு சாதகமாக பாராமுகம் காட்டின. இது கொடுமை இல்லையா? அக்கிரம அநியாயமில்லையா? இருநூறுக்கும் அதிகமான மக்களின் கண்ணீருக்காக துடிக்கும் சீனாவின் உணர்வினை மதிக்கிறோம்; அவர்களுடன் நாமும் பரிதபிக்கிறோம். அதே வேளையில் முதியவர்கள்,பால் மறக்காத குழந்தைகள், இளம் வயதினர் என எல்லோரையும் கொன்ற கொலைகார நாட்டுக்கு இந்த சீன தேசம் இன்னும் ஆதரவாக இருந்து எல்லா பொல்லா உபகரணங்களையும் தந்துகொண்டு கம்யூனியசத்தைப் பற்றி வாய்கிழிய பேசுவதில் என்ன மனித உணர்வு இருக்கிறது? என்ன நியாயம் இருக்கிறது?
இலங்கையில் வீழ்ந்த எம்மின மக்களுக்காக உதயா ஒரு கவிதை எழுதி THR Raga – வில் அன்றாடம் ஒலி பரப்பிக் கொண்டிருந்தால் உடனே சீட்டு கிழிஞ்சிடும் என்று உதயாவுக்குத் தெரியாத என்ன?. ஆட்டுவோர் ஆட்டுவிக்க இவர்கள் வாங்கும் சம்பளத்துக்கு பொம்மலாட்டம் ஆடுகின்றார்கள். அவ்வளவே.