தாய் செயற்கைக்கோள் 300 பொருள்களைக் கடலில் கண்டது

picகாணாமல்போன  மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370  விமானத்தைத்  தேடும்  இடத்துக்கு  200 கிலோ மீட்டர்  தென்மேற்கே  சுமார்  300  பொருள்கள்  இந்தியப்  பெருங்கடலில்  மிதப்பதை  தாய்லாந்தின்  செயற்கைக்கோள்  கண்டிருக்கிறது.

கடலில்  மிதக்கும்  பொருள்கள்   பற்றிய  செயற்கைக்கோள்  படங்களைக்  காண்பிக்கும்  ஐந்தாவது  நாடு  தாய்லாந்து. ஏற்கனவே ஆஸ்திரேலியா,  பிரான்ஸ்,  பிரிட்டன்,  சீனா  ஆகிய  நாடுகள்  செயற்கைக்கோள்  படங்களை  வெளியிட்டுள்ளன.

அப்பொருள்கள் 2-இலிருந்து  15 மீட்டர்  அளவு  கொண்டவை  என்றும்  பெர்த்துக்கு  2,700  கிலோ  மீட்டர்  தொலைவில்  அவை  கடல் பரப்பில்  மிதக்கக்  காணப்பட்டதாகவும்  ஏஎப்பி  செய்தி  நிறுவனம்  கூறிற்று.

அவை  மார்ச்  24ஆம்  நாள்  பிடிக்கப்பட்டவை  என   வால்  ஸ்திரிட்  ஜர்னல்  கூறியது.