பாஸ்: ‘ராஜா போமோ’ இன்னும் சடங்குகள் செய்ய அனுமதிக்கப்படுவது ஏன்?

bomohதம்மை  ‘ராஜா  போமா’ (போமோக்களின் அரசன்)  என்று  கூறிக்கொள்ளும்  இப்ராகிம்  மாட் ஜைன்,  எம்எச்370  தொடர்பில்  தொடர்ந்து  சடங்குகள்  செய்ய  அனுமதிக்கப்படுவது  ஏன்  என  பாஸ்  இளைஞர்  பகுதி  கேள்வி  எழுப்பியுள்ளது.

பேராக்,  பூலாவ்  செம்பிலானில்,  “கடலிலிருந்து  பிணங்களை  மேலே  கொண்டு  வருவதற்கான”  சடங்கு  ஒன்றை  அவர்  செய்வதாகக் காண்பிக்கும்  காணொளி  ஒன்றைச்    சுட்டிக்காட்டிய  பேராக்  பாஸ்  இளைஞர்  தலைவர்  ராஜா அஹ்மட்  இஸ்கண்டர்  ராஜா  யாக்கூப், அது  “இஸ்லாத்துக்கு  விரோதமான”  செயல்  என்றும்  அதற்கு  எதிராக  நடவடிக்கை  தேவை  என்றும்  வலியுறுத்தினார்.

“பேராக்  முப்தி  ஹருஸ்ஸானி  ஜக்கரியா,  ராஜா  போமோ-வைக்  கண்டித்த  பின்னரும்  இப்படிப்பட்ட  மூடநம்பிக்கை செயல்கள்  தொடர்ந்து  நடப்பதைக்  கண்டு  பாஸ்  இளைஞர்கள்  ஏமாற்றமடைகின்றனர்”,  என்றாரவர்.

பேராக்  இஸ்லாமிய  விவகாரத் துறை  ஏன்  இதைத்  தடுக்கவில்லை  எனவும்  அவர்  வினவினார்.