‘மலேசியாகினி, FZ ஆகியவை பத்திரிகை வடிவில் வந்தால் மக்களைக் குழப்பும்’

zahidமலேசியாகினி  செய்தித்  தளம், FZ.com  ஆகியவை  செய்திதாள்  உரிமம்  கேட்டு  செய்திருந்த  விண்ணப்பங்கள்  நிராகரிக்கப்பட்டதற்கு விளக்கமளித்த  உள்துறை  அமைச்சர் “அளவுக்கு  அதிகமான”  செய்தித்தாள்கள்  இருந்தால்  மக்கள்  “குழப்பமடைவர்”  என்றார்.

நாடாளுமன்றத்தில்  ஜோஹாரி  அப்துலுக்கு (பிகேஆர்- சுங்கை  பட்டாணி) வழங்கிய  எழுத்துப்பூர்வமான  பதிலில்  அமைச்சர்  அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, “நாட்டில்  இப்போதுள்ள  வாசகர்களுக்கு  இருக்கும்  செய்தித்தாள்களே  போதும்”  என்றார்.

மலேசியாகினியும்  FZ.com-மும் மக்கள்  கவனத்தை  ஈர்ப்பதற்காக  “பரபரப்பான  சர்ச்சைக்குரிய  செய்திகளை” வெளியிடுவதை  வழக்கமாகக் கொண்டவை  என்றும்  அவர்  கூறிக்கொண்டார்.