பினாங்கின் இரண்டாவது பாலம் திறக்கப்பட்டு 27 நாள்கள் ஆனாலும்கூட அதற்கான சாலைக்கட்டணம் இன்ன்மும் “மர்மமாகவே” இருப்பது வருத்தமளிப்பதாக பிகேஆர் பாயான் பாரு எம்பி சிம் ட்சே ட்ஸின் கூறினார்.
இதன் தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் பொதுப்பணி துணை அமைச்சர் ரோஸ்னா அப்துல் ரஷிட் ஷிர்லினுடன் “காரசாரமாக விவாதம்” நடத்தியதாக சிம் தெரிவித்தார்.
சாலைக்கட்டணத்தை அரசாங்கம் முடிவு செய்துவிட்டதாக ரோஸ்னா நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால், மேலதிக விவரங்களைச் சொல்ல மறுத்தார் என்றாரவர்.
“நெடுஞ்சாலை வாரியம் அறிவிக்கும் என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார் அவர். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை”, என சிம் கூறினார்.
யார் யாருக்கு எப்படி,எவ்வளவு பங்கு என்று பிரிக்க அவகாசம் தேவை.
சும்மா கண்ணை மூடிகொண்டு கொடுத்தால் bn – னில் பிளவு
ஏற்படும்.
bn barang naik
பாகேட்டுக்கு எவ்வளவு போகவேண்டும் என்று கணக்கு பார்க்க முடியாமல் MAS 370 தடுக்கிறது. அதான்….