ஐக்கிய நாட்டு மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நேற்று அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் அமோக வெற்றி பெற்றது.
அமெரிக்கா, பிரிட்டன், மெஸிடோனியா, மொரீஷியஸ், மொன்டேநேக்ரோ ஆகிய நாடுகள் முன்னின்று கொண்டுவந்த தீர்மானத்திற்கு 47 உறுப்பு நாடுகளில் 23 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், வெனிசூவேலா, வியட்நாம் உள்ளிட்ட 12 நாடுகள் இலங்கையை ஆதரித்து தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.
இந்தியா உள்ளிட்ட மற்ற 12 நாடுகளும் வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கிகொண்டன. ஒதுங்கிக் கொண்ட நாடுகளில் எதியோப்பியா, குவைட், இந்தோனேசியா, ஜப்பான், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளும் அடக்கம்.
இதற்கிடையில் வாக்கெடுப்புக்கு முன், நடுநிலமை வகிப்பேன் எனக் கூறிய இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்கப் பிரேரணையின் பத்தாவது பந்தியை நீக்க வாக்களித்தது. ஆனாலும் அந்தப் பிரேரணை படு தோல்வியடைந்துள்ளது.
மலேசியா இம்முறை மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்காததால் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
வாக்கெடுப்புக்கு முன்னதாக தீர்மானத்தை முன்வைக்கும் நாடுகள் சார்பில் பேசிய அமெரிக்கா, இலங்கை மீதான விசாரணையை மனித உரிமைகள் உயர் ஆணையர் ஏற்கவேண்டும் என்ற தீர்மானத்தின் கோரிக்கையை முன்மொழிந்தார்.
நிபுணர்களின் துணையுடன் விரிவான விசாரணை.
மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும்.’இரண்டு தரப்பினராலும் புரியப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பில், ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் பொருத்தமான நிபுணர்களின் துணையுடன் விரிவான விசாரணைகளை நடத்தவேண்டும் என்று இந்தத் தீர்மானம் கோருகிறது’ என்றார் அமெரிக்கப் பிரதிநிதி.
இலங்கையில் தற்போது நிலவும் மனித உரிமைகளின் நிலவரம் பற்றியும் தொடர்ந்து கண்காணித்து, மதிப்பிட்டு, அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையரின் அலுவலகத்தை இந்தத் தீர்மானம் கோரியுள்ளது.
இலங்கை இந்தத் தீர்மானத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்துள்ளது.
‘இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அபாயகரமான முன்னுதாரணமாக அது அமைந்துவிடும். அதாவது இந்த ஆணையத்தின் நடைமுறைகளை மீறி குறுக்கு வழிகளில் தங்களின் வேலைகளை முன்னெடுத்துச் கொள்வதற்கு சில நாடுகளுக்கு வழிகிடைத்துவிடும்’ என்றார் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க.
தீர்மானத்தில் பொருத்தமான நிபுணர்கள் தொடர்பில் கூறப்படுகின்ற ஏற்பாடு தெளிவின்றி இருப்பதாக் கூறிய இலங்கைப் பிரதிநிதி, அதன்மூலம் மூன்றாவது தரப்பு சக்திகள் இலங்கையின் விவகாரத்தில் நுழைந்துவிடுவதற்கும் கதவுகள் திறக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் ஆரம்பம் முதலே இலங்கைக்காக முன்னின்று குரல் கொடுத்துவந்த பாகிஸ்தான் இன்றும் அந்தப் பணியைச் செய்தது.
‘இலங்கை மீது இந்த தீர்மானத்தைக் கொண்டுவருகின்ற நாடுகளின் சொந்த மனித உரிமை விவகாரங்களைப் பார்த்தால் அவர்களுக்கு இலங்கை மீது பொறுப்பு சுமத்த முடியாது. அந்த நாடுகள் இங்கு மற்றவர்களின் பிரச்சனைகளில் நீதிபதிகளாக இருக்க முடியாது’ என்றார் பாகிஸ்தானிய பிரதிநிதி.
இந்தியா மௌனம் கலைத்தது
‘அடுத்தவர் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் தீர்மானம்’- இந்தியா
இம்முறை ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பில் ஆரம்பம் முதலே காத்துவந்த மெளத்தை இந்தியா இன்று போட்டு உடைத்தது.
‘வரம்பு கடந்த அதிகாரத்துடன் கூடிய வெளிநாட்டு விசாரணை பொறிமுறைகளை அமைப்பது என்பது, 2006-இல் இந்த மனித உரிமைகள் ஆணையம் உருவாகக் காரணமாக இருந்த பொதுச் சபை தீர்மானத்தின்படி, பேச்சுவார்த்தை மற்றும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு என்கின்ற இந்த ஆணையத்தின் தேவையை பிரதிபலிப்பதாக அமையவில்லை. அதனால் வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறோம்’ என்றார் இந்தியப் பிரதிநிதி.
வாக்கெடுப்பு நிலைக்கு சபை வந்தபோது, இலங்கை தொடர்பில் விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணையத்திடம் போதுமான நிதிவளம் இல்லை என்று பாகிஸ்தான் வாதிட்டது.
ஆனால், ஆணையத்தின் பொதுவான பட்ஜெட்டிலிருந்து இதற்கான நிதி ஒதுக்க வழிசெய்யப்படும் என்றும் நிதிவிவகாரத்துக்குப் பொறுப்பான அதிகாரி சுட்டிக்காட்டினார்.
ஆனாலும் இலங்கை மீதான தீர்மானத்தை தாமதப்படுத்தும் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்ற பாகிஸ்தானின் வாதம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் நிராகரிக்கப்ட்டது.
இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்படுவதற்கு வழிசெய்யக்கூடிய தீர்மானத்தின் 10-வது பந்தியை நீக்க வேண்டும் என்று கோரிய இலங்கைக்கு ஆதரவான கோரிக்கையும் வாக்கெடுப்பின் மூலம் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீதி நிலைக்க மனித குளம் நினைக்க …!
இந்தியா வல்லரசு அல்ல , பாழ் அரசு !
நன்றி இறைவா.ஆதரவு அளித்த நாடுகளுக்கு மனமார்ந்த நன்றி.துரோகம் செய்த இந்தியா நீ பச்சை துரோகி என்று நிருபித்து விட்டாய்.இனி தனி தமிழ் நாடுதான் மற்றும் ஈழம் தீர்வு.
இவ்விடையத்தில்……
மலேசியாவின் நிலைப்பாடு
என்ன ?
தனி தமிழர் நாடு ஒன்றே உலக தமிழர் நலனை காக்கும்!
மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
மாருகோ மாருகோ மாருகயி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
இந்தியாவை நம்பிய தமிழர்களை முதிகில் குத்திய இந்தியாவை இன்னுமா நம்பவேண்டும்? ஏ தமிழகமே விழித்திடு.மாற்று வழியைத்தேடு மரணமே வந்தாலும் கொள்கையில் மாறாதே, தனி தமிழ் நாடு வேண்டும்
சிவதாண்டவம் ஆரம்பம்.
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு மனித நேயம் செத்து விட்டதா
இந்தியாவின் பற்றும் பாசமும் யார்மேல்….?! தமிழர்கள் மீதா அல்லது சிங்களவர்கள் மீதா என்பதற்கு மீண்டும் ஒரு நல்ல விடை. BJP ஆட்சிக்கு வந்தாலும் ஏறக்குறைய இதே நிலைதான்; சற்று சாதகமாக இருக்கும், அவ்வளவுதான். இந்தியா முழுவதும் வடவனின் ஆதிக்கம். தமிழர் நாட்டில் திராவிடர்களின் ஆதிக்கம் தமிழர்கள் அதற்கும் இதற்கும் கெஞ்சிக்கொண்டு இருக்க வேண்டிய அவலம்தான். இங்கு தமிழர்கள் இதற்கும் அதற்கும் UMNOB அரசிடம் மண்டியிட்டுக் கெஞ்சிக்கொண்டு இருப்பது போல. மேடைகளில் நமது பெருமைகளையும் சாதனைகளையும் பற்றி பேசும் நாம், எதற்கும் மண்டியிட்டு கெஞ்சும் நிலையில் உள்ளோம் என்பதை உணர்கிறோமா?! இந்த நிலைமாற என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி பேசவேண்டும்; பேசியதை நடைமுறையில் கொள்கையுடன் கடைபிடிக்கவும் வேண்டும். இன உணர்வு, ஒற்றுமை, தன்மானம், நேர்மை தேவை.
இந்த விசயத்தில் அமெரிக்கா,இந்திய பிரஜைகளை நாட்டை விட்டு
வெளியேற்றினால்,இந்தியாவில் புது குழப்பம் உருவாகும்.தனி ஈழம்
உருவாக்கி தனக்கு எதிர்பாக வாக்களித்த நாடுகளிடம் நேச கரம்
நீட்டாமல் குறிப்பாக (இஸ்லாமிய நாடுகள் ) புறக்கணிக்கனும்.
தமிழர்களின் முதல் எதிரி இந்தியா,தமிழ் நாட்டில் ஆறு கோடி பேராம்,இதில் சுய தமிழன் ஒன்று இரண்டு லச்சம் பேர்தான் ,நான் தமிழனாக பிறந்ததற்கு வேதனை படுகிறேன் ,அனால் விடுதலை புலிகள் என்ற தமிழன் காலத்தில் வாழ்கிறேன் என்ற பெருமையும் ,திமிரும் எனக்கு பெருமையளிகின்றது
இந்தியா & பாகிஸ்தான்
நாடுகளுக்கு இடையே எப்படிபட்ட உறவு இருக்கிறது என்பது எல்லோரும் அறிவீர்கள்.
பாகிஸ்தான் எது செய்தாலும் தவறுகண்டு பிடித்து
அதற்கு எதிராக செயல்படும் இந்தியா.
பாகிஸ்தான் ஐநா மன்றத்தில் கொண்டுவந்த இரண்டு தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது.
“தமிழரை எதிர்பதில்” இந்தியா எவ்வளவு வேகமும்,
ஆர்வமும்
காட்டுகிறார்கள் என்பதை இனிமேலாவது அறிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவே…!
நீ என்ன எங்களை எதிர்கிறது நாங்களும் உங்களை மறக்கமாட்டோம்.
நீங்கள் எப்போதும் எமக்கு எதிரிதான்.
தன்மானம் உள்ள மலேசிய தமிழர்கள் இந்திய இறக்குமதி பொருட்களை, வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
மண் மோகன் சிங் ஒழிக
உலக தமிழ் இனமே இன்னுமா வேண்டும் இந்தியா.
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்த நாடுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வோம். அதே வேளையில் உடனடியான நடவைக்கையும் எடுக்க வேண்டும். தமிழ் ஈழம் எனும் தனி நாடு அமைந்திட வழிவகை செய்திடல் வேண்டுமெனவும் வேண்டுகிறோம்..!
அடுத்து சோனியாவுக்கு ,3 தோட்டாக்கள் காத்து கொண்டு இருக்கிறது ,
அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்த நாடுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்,ஜ,நா மனித உரிமை ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் இலங்கை உள்ளே நுழைய கதவு திறக்கப்பட்டுள்ளது!
தனித் தமிழ் நாடே தமிழர்களின் தன் மானக் சின்னம்.நமது மொழி கலை, பண்பாடு, சமயம் அனைத்துக்கும் உலக அரங்கில் அங்கிகாரம் வேண்டும் என்றால் தனித் தமிழ் நாடே நல்ல தீர்வு .ஆரியன் ஆட்சியில் தமிழருக்கு விமொச்சினம் கிடையாது.
வடநா ட்டுகரன் 2000 வருடமாக தமிழ் மக்களை முட்டாளாக்கி பார்க்கின்றான். பிராமணன் ஒழிந்தால்தன் நமக்கு விடிவுகாலம் பிறக்கும். வந்தவர்களுக்கு வாழ்வு கொடுக்கும் கொள்கையை இனி கடைபிடிக்க கூடாது. தமிழனம் என்ற ஒரே கொள்கைவுடன் வாழவேண்டும்.
நன்றி இறைவா.ஆதரவு அளித்த நாடுகளுக்கு மனமார்ந்த நன்றி.துரோகம் செய்த இந்தியா நீ பச்சை துரோகி என்று நிருபித்து விட்டாய்.இனி தனி தமிழ் நாடுதான் மற்றும் ஈழம் தீர்வு
இலங்கையா…? இந்தியாவின் ஓர் அங்கமாக இருக்கக்கூடிய தமிழகமா…? எனும் பளிச்… கேள்விக்கு இந்திய ஆரிய ஆதிக்க அரசின் தடுமாற்றமில்லாத ஒரே சந்தர்ப்பவாத பதில் இலங்கை… ! இலங்கை…! இலங்கை…!
தமிழனே… அடுத்த ரவுண்டு ப.ஜ.க. ஆட்சி வருவதாக ஓர் கற்பனை! அப்போது என்ன நடக்கும்? இந்திய மாநிலங்களின் எல்லா ஆரிய ஆதிக்கங்களும் ஒன்று திரண்ட கூட்டம்தான் ப.ஜ.க. பெரும்பாண்மை ஆட்சி தன் கையில் என்றால்…!!!? புதிய ஆட்சியின் பதிலும்… இலங்கை…! இலங்கை…! இலங்கை…!
இது நடக்கவில்லை எனில் …. நான் இந்தப் பகுதியில் மட்டுமல்ல என் வாழ்நாளில் எந்தப்பகுதிலும் எழுதுவதையே விட்டுவிடுகிறேன்.
தமிழர்களுக்கு இந்திய துரோகம் இளைத்து விட்டது .ஆரியன் என்றுமே திராவிடனுக்கு துரோகியே.துரோகிக்கு தமிழ் நாட்டில் உள்ள ஒருவர் கூட கங்கிரேசுக்கு வாக்களிக்க கூடாது.
வெச்சாண்டா ஆப்பு .
உலகம் முழுவதும் தமிழனுக்கு சவால்கள் நிறைந்து விட்டது.
தனி தமி நாடு வேண்டும்.போராடுவீர் சகோதரர்களே.