லிம்: குளறுபடி செய்த துணை அமைச்சரைத் தூக்குவீர்

kitஅரசாங்கத்தின்மீதும்  நாட்டின்மீதுமுள்ள  நம்பிக்கையைக்   கெடுக்கும்  வகையில்  நடந்துகொண்ட  தற்காப்புத்  துணை  அமைச்சர்  அப்துல்  ரஹிம்  பக்ரி  பதவி  விலக  வேண்டும்  அல்லது பதவிநீக்கம்  செய்யப்பட  வேண்டும்  என்று  குமுறுகிறார்  லிம்  கிட்  சியாங்.

மார்ச்  8-இல்  எம்எச்370  விமானத்தை அரச  மலேசிய  ஆகாயப்படை  இடைமறிக்காததற்கு  துணை  அமைச்சர்  கூறிய  காரணம்தான்  லிம்மைக்  கொதிப்படைய  வைத்துள்ளது.    விமானப் போக்குவரத்துக்  கட்டுப்பாட்டுக்  கோபுரத்தின்  உத்தரவின்பேரில்தான்  அந்த  விமானத்  திரும்பி  வருவதாக  ஆகாயப்படை  “அனுமானித்துக் கொண்டது”  என்று  அப்துல்  ரஹிம்  கூறி  இருந்தார்.

புதன்கிழமை  நாடாளுமன்றத்தில்  அதைத்  தெரிவித்த  அப்துல்  ரஹிம்,  பின்னர்,  அது  ஆகாயப்படையின்  அனுமானம்  அல்ல  என்றும்  அது  தம் சொந்த  “அனுமானம்”  என்றும்  கூறினார்.

துணை  அமைச்சரின்  விளக்கம் ‘அபத்தமானது’  என லிம்  சாடினார்.

எம்எச்370  வானத்தில்  காணாமல்போனதும்  அதைத்  தேடும்  பணியில்  ஆகாயப்படையும்  சிவில்  விமானப்  போக்குவரத்தும்  உடனடியாக  ஈடுபடாததும்  ஏன்  என்பதைத்  தெரிந்துகொள்ளும்  உரிமை  மலேசியர்களுக்கு  இருப்பதாக  அவர்  கூறினார். இதற்கு  விடை  தெரிந்துகொள்ள  கருப்புப்  பெட்டி  கிடைக்கும்வரை  காத்திருக்க  வேண்டியதில்லை  எனவும்  அவர்  குறிப்பிட்டார்.