காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தைத் தேடும் பணி இன்று மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது.
நேற்று வானிலை மோசமாக இருந்ததால் தேடும் பணி இரத்துச் செய்யப்பட்டது. இன்றும் வானிலை மோசமாகத்தான் இருந்தது. ஆனாலும் பகலில் நிலைமை சீரடையலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. வானிலை மோசமடைந்திருந்தாலும் ஆறு கப்பல்கள் அப்பகுதியிலேயே இருந்து தேடும் பணியைத் தொடர்கின்றன.
தேடப்படும் பகுதிக்கு அருகில், மற்ற நாடுகளின் செயற்கைக்கொள்கள் கண்டதைப் போன்ற மிதக்கும் பொருள்களை தாய்லாந்து, ஜப்பான் நாட்டு செயற்கைக்கொள்களும் கண்டிருப்பதால் அவை காணாமல்போன விமானத்தின் பொருள்களாக இருக்கலாம் என்ற நம்பிக்கை இப்போது மிகுந்து தேடும்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
தேடுங்கள் தேடுங்கள் கிடைக்கும்வரை தேடுங்கள்.தேடல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளுவோம். பன்னாட்டுப் பணியாயாளர்களுக்கு இந்நாட்டு மக்களின் சார்பில் நன்றி.