இன்று காலை, பாகாங், லஞ்சாங்கில், லைனாஸ் தொழிற்சாலையின் பொருள்களை ஏற்றிச் சென்ற ஒரு லாரி விபத்துக்குள்ளானதை அடுத்து அப்பொருள்கள் சாலையில் சிதறிக் கிடந்தன. அச்சாலைப் பகுதி போக்குவரத்துக்கு மூடப்பட்டது.
அச்சம்பவத்தை உறுதிப்படுத்திய லைனாஸ் மலேசியா பொது உறவு மற்றும் தொடர்பு மேலாளர் அமின் அப்துல்லா, அப்பொருள்கள் ஆபத்தற்றவை என்றும் அவற்றால் கதிரியக்க அபாயமில்லை என்பதையும் வலியுறுத்தினார்.
லாரி, பகாங், கெபெங் தொழிலியல் மண்டலத்தில் உள்ள லைனாஸ் மலேசியா தொழிற்சாலையிலிருந்து அப்பொருள்களை வெளிநாட்டு ஏற்றுமதிக்காக கிள்ளான் துறைமுகத்துக்குக் கொண்டு சென்றபோது அவ்விபத்து நிகழ்ந்தது என்றாரவர்.
ஐயோ நீங்கள் சொல்லுவதை நாங்கள் நம்ப விடுமா
ஆபத்து இல்லை என்றால் எதற்கு உடல் கவசம்?சரிங்க அப்துல்ல நாங்க நம்பிடோம்.