கடப்பிதழ்களை இண்டர்போலின் தரவுத்தளத்தில் சரிபார்க்க 0.2 வினாடி போதும்

interpolஅனைத்துலக  போலீஸ்  அமைப்பான இண்டர்போல்,  அதன்  தரவுத்தளத்தில் கடப்பிதழ்களைச்  சரிபார்ப்பது  சிக்கலான  வேலை  என்று  மலேசியா  கூறி  இருப்பதை  நிகாரித்துள்ளது.

மலேசிய  உள்துறை  அமைச்சர்  ஜாஹிட்  ஹமிடி,  புதன்கிழமை  நாடாளுமன்றத்தில்  இண்டர்போலின்  தரவுத்தளத்தில்  கடப்பிதழ்களைச்  சரிபார்க்கத்  தொடங்கினால்  குடிநுழைவுத்துறையின்  வேலை  வேகமாக  நடக்காது  என்று  கூறியதை  அடுத்து  அது  இவ்வாறு பதிலளித்தது.

ஒரு  கடப்பிதழ்  திருடப்பட்டதா  என்பதை  0.2  வினாடியில்  தனது  தரவுத்தளத்தில்  சரிபார்த்துக்கொள்ள  முடியும்  என  இண்டர்போல்  கூறியது. இந்தச்  சரிபார்க்கும்  வேலை  மிக  மெதுவாக  நடப்பதாக  எந்த  உறுப்புநாடும்  இதுவரை  முறையிட்டதில்லை  என்றும்  குறிப்பிட்ட  அது, . மலேசியா  தான்  செய்யத்தவறிய  ஒரு  செயலுக்கு  இண்டர்போல்மீதோ  தொழிநுட்பத்தின்மீதோ  பழிபோடக்கூடாது  என்றும்  கூறிற்று.

திருடுபோன  ஆஸ்திரிய, இத்தாலி   கடப்பிதழ்களை  வைத்திருந்த  இருவர்  மார்ச்  8-இல்  காணாமல்போன  எம்எச்370-இல்  பயணம்  செய்திருக்கிறார்கள்.

ஆனால்,  விமானம்  காணாமல்போனதற்கும்  அவர்களுக்கும்  தொடர்பிருப்பதாக   அதிகாரிகள்  நம்பவில்லை.

-ராய்ட்டர்ஸ்