பாலிங்கான் இடைத் தேர்தலில் தகுதிபெற்ற வாக்காளர்களில் பாதிக்கு மேற்பட்டோர் வாக்களித்து விட்டனர்.
காலை மணி 11-க்கு, 13,233 வாக்காளர்களில் 7,085 பேர் வாக்களித்து விட்டனர் என உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.
பாலிங்கானில், 12-நாள் பரப்புரைக்குப் பின்னர் இன்று காலை 8மணிக்கு வாக்களிப்பு தொடங்கியது.
பாலிங்கான் இடைத் தேர்தல் பிஎன்னின் வேட்பாளர் முன்னாள் தாலாட் மாவட்ட அதிகாரி யுஸ்ஸிப்னோஷ் பாலோவுக்கும் பிகேஆரின் வேட்பாளரான அப்துல் ஜலில் பூஜாங்குக்குமிடையிலான நேரடிப் போட்டியாக அமைந்துள்ளது.
யுஸ்ஸிப்னோஷ் பாலிங்கானைச் சேர்ந்தவர். அப்துல் ஜலில் பிந்துலுவைச் சேர்ந்த ஒரு வணிகர்.
இன்றைய இடைத் தேர்தலில் சுமார் 10,586 வாக்காளர்கள் அதாவது 80 விழுக்காட்டினர் வாக்களிப்பார்கள் எனத் தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.
மக்கள் யாரை தேர்வு செய்தார்களோ,அப்படி இருக்கலாம்,அனுமானம்,எங்களுக்கு தெரியாது ,இப்படி இருக்கலாம்,சொல்லுபவர்கள் நமக்கு தேவையில்லை.மக்கள் நலனை கருத்தில் கொள்பவர்கள் நாட்டுக்கும்,நமக்கும் தேவை.
முஹிடின் ஆதிகால அநாகரிகமற்ற knowledge இல்லாத மக்களை ஏமாற்றி ஜெயித்தாய்!!!!!!!!!!!!!!!!