பிரிட்டனைச் சேர்ந்த செயற்கைக்கோள் நிறுவனமான இம்மார்சாட், எம்எச்370 “இந்தியப் பெருங்கடலில் விழுந்தது” என்ற மலேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அறிவிப்புக்கும் தனக்கும் தொடர்பில்லை எனக் கூறியுள்ளது.
இம்மார்சாட் வழங்கிய தகவல்களை வைத்து அப்படியொரு முடிவை எடுத்தது மலேசிய அரசாங்கம்தான் என இம்மார்சாட் பேச்சாளர் ஜோனதன் சின்னாட் தெரிவித்தார்.
“நாங்கள் மலேசியர்களுக்குத் தகவல்களை வழங்கினோம். அவர்கள் அவர்களிடமிருந்த மற்ற தகவல்களையும் சேர்த்து, அந்தத் தகவல்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாது, அவற்றின் அடிப்படையில் அந்த முடிவுக்கு வந்தனர்.
“மலேசியர்களின் அறிவிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. அது அவர்களின் முடிவு. நாங்கள் தகவல்களில் ஒரு பகுதியை அளித்தோம். அவ்வளவுதான்”, என்றவர் கூறியதாக சைனா டெய்லி தெரிவித்தது.
நஜிப், இம்மார்சாட் நிறுவனம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் எம்எச்370 “இந்தியப் பெருங்கடலில் விழுந்தது” என மார்ச் 24-இல் செய்தியாளர் கூட்டமொன்றில் அறிவித்தார்.
குழப்பமா இருக்குதே,எங்கேயோ இடிக்குதே,கடலுல விழுந்ததன இன்னும் ஏன் தடயங்கள கடவில்லை?சேட்டலைட் மூலம் 4,122,300 பாகங்கள் தெரியுது சொன்னங்க இன்னும் ஏன் தாமதம்.புரியலையா ?
எங்கள் பிரதமர் சொல்லிவிட்டார். அதனால் நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்! ஆனால் நீங்கள் மலேசியா அல்ல என்பது பின்னர் தான் புரிந்தது!
என்ன கொடுமை சார் இது>>>>>>?????!!!!!!!!!!!!!! தலை சுத்துது….சாமீ !!!!
கூடிய விரைவில் மற்றுமொரு செய்தி வரும். விமானம் தென் இந்திய சமுத்திரத்தில் விழுந்தது என்பது ‘false alarm’ என்று. மலேசியர்கள் அதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்ன தலை எழுத்துப்பா இது?
இதில் ஏதோ மர்மம் இருக்கு