ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பட், எம்எச்370 இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக மலேசியப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியதைத் தற்காத்துப் பேசியுள்ளார்.
“கிடைத்துள்ள ஆதாரங்கள் விமானம் தொலைந்து போனதையும் இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் அது காணாமல் போயிருக்க வேண்டும் என்பதையும் காண்பிக்கின்றன.
“அளவுக்கு அதிகமாகவே கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அப்படியொரு முடிவுக்கு வந்தது முற்றிலும் சரியே. முடிவுக்கு வந்த பின்னர் அதைப் பொதுவில் அறிவிப்பது அவரது கடமையாகும்”, என்று அப்பட் கூறியதாக பிரிட்டனின் த டெலிகிராப் செய்தித்தாள் கூறிற்று.
விமானத்தின் உடைந்த பகுதிகளைக் கண்டெடுக்காமல் செயற்கைக்கோள் தகவல்களின் அடிப்படையில் நஜிப் விமானம் கடலில் விழுந்ததாக அறிவித்ததை எண்ணி சீனப் பயணிகளின் குடும்பத்தார் சினமடைந்துள்ளனர்.
” LYNAS ” எதிர்ப்பாளர்களின் சதி நாச வேலைதான் இந்த ” MH 370 ” விமான பேரிடர் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பட் மற்றும் மலேசியப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் கூட்டாக அறிவிப்பு செய்வார்கள் என்று பரவலாக பேசபடுகிறது.
சுருக்கமாக சொன்னால் அம்நோவில் A to z எல்லாம் தில்லு முல்லுதான்,ஏன்,ஆதாரம் இல்லாமல் இந்த அவசர அறிக்கை? ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,navy கப்பல்களை அனுப்பி ரோஸ் அம்மாவின் மோதிரத்தை தேடுகிறார்களோ?