அன்வர் இப்ராகிம் குதப்புணர்ச்சி வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும் கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம் என்கிறார் பிகேஆர் இளைஞர் பகுதி: உதவித் தலைவரும் ஒரு வழக்குரைஞருமான ரட்ஸ்லான் ஜலாலுடின்.
குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் ஓர் அமைப்பில் பொறுப்பான பதவி வகிக்கக்கூடாதுதான். ஆனால், சங்கப் பதிவதிகாரியிடமிருந்து விலக்குபெற்று தலைவராக பதவி வகிக்கலாம் என்று அவர் தெரிவித்தார். சங்கப் பதிவுச் சட்டம் பகுதி 9ஏ(4) அதை அனுமதிக்கிறது.
அந்தச் சட்டவிதியைப் பயன்படுத்தி அன்வார் பிகேஆரின் தலைவர் ஆவதைத் தடுக்க சங்கப்பதிவதிகாரிக்கு எவ்வித காரணமும் இல்லை என ரட்ஸ்லான் கூறினார்.
இந்த கட்சியின் நிலை ஒரு கேலிக் கூத்தாகி விட்டது.
எந்த தவறும் இல்லை.. “நீங்கள் அதனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் : உங்கள் “ஆசை” நெஞ்சை தொட்டு பார்த்து கொள்ளுங்கள்! அந்த வகையில் பார்த்தல்…. அவர் தலைமை பொறுப்புக்கு போட்டி இடுவதில் எந்த தவறும் இல்லை! போட்டி இட்டால் அமோகமாக வெல்லுவார் என்பதும் உண்மை.