அன்வார் இப்ராகிமும் கர்பால் சிங்கும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தாலும் அவ்விருவரும் முறையே பெர்மாத்தாங் பாவ் மற்றும் குளுகோர் எம்பிகளாக தொடர்ந்து இருக்கலாம் என மக்களவை துணைத் தலைவர் இஸ்மாயில் முகம்மட் சைட் கூறினார்.
நீதிமன்ற நடைமுறைகள் முடிவுறும்வரை அவ்விருவரும் எம்பிகளாக இருக்கத் தடையில்லை.
கூட்டரசு அரசமைப்பின்படி தங்களின் எம்பி தகுதி குறித்து “சந்தேகம்” எழுவதால் அதற்கு விளக்கம் தர வேண்டும் என கர்பால் கேட்டுக்கொண்டதை அடுத்து இஸ்மாயில் இவ்வாறு கூறினார்.
எனினும், இவ்விவகாரத்தை அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவிடம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருப்பதாக அவர் சொன்னார்.
“அதற்கிடையில், மேல்முறையீடு செய்திருப்பதால் மேல் நீதிமன்ற முடிவுக்காகக் காத்திருப்போம்”, என்றாரவர்.
அரசாங்கம் ஒரு நல்ல முடிவெடுக்க வேண்டும்,பொருளாதாரம் பிரச்னை,விலை உயர்வு,இப்படி பல பிரச்னை இருக்கும் பொது அங்கே இடை தேர்தல் தேவையா அப்படி நடந்தால் பணம் வீண் விரயமாகும்.அரசாங்கம் நாலா பக்கம் யோசித்து முடிவெடுக்க வேண்டும் அதுதான் நாடிற்கு நல்லது.