பிரதமர்துறை அமைச்சர் ஷகிடான் காசிம் “வாக்காளர் இன ஒதுக்கீடு” முறை வேண்டும் என்று ஆலோசனை கூறியதற்காக அவர் உடனடியாக அவரது அமைச்சர் பதவியத் துறக்க வேண்டும் என்று டிஎபி செரடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, நாட்டில் நல்லிணக்கத்தை நிலைநாட்ட மலேசியர்கள் இன அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்று ஷகிடான் கருத்து தெரிவித்திருந்தார்.
ஷகிடான் முன்மொழிந்திருக்கும் வாக்களிப்பு முறை தென்ஆப்ரிக்காவில் இன ஒதுக்கீடு காலத்தில் நடைமுறையில் இருந்ததாகும் என்று ஓங் அவருக்கு நினைவுறுத்தினார்.
பெர்லிஸ் மாநில முன்னாள் மந்திரி புசாரும் அராவ் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷகிடானிடமிருந்து வரும் சாதாரன மன்னிப்பு தெரிவித்தல் போதுமானதல்ல என்று ஓங் கூறினார்.
ஷகிடான் முன்மொழிந்திருப்பது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பதைச் சுட்டிக்காட்டிய ஓங், “அவரது மன்னிப்பு அவருக்கு அரசமைப்புச் சட்டம் தெரியாது என்பதை ஈடுசெய்வதாகாது”, என்றார்.
மக்கள் அரசு தேர்வு செய்தனர்
அரசு குப்பை சுத்தம் செய்ய வேண்டும்
அடுத்த தேர்தல் வரும்,……!
சிந்திக்காமல் வார்த்தைகளை உதிக்கின்ற மந்திகள், தாங்கள் மதிகெட்டு தரங்கெட்டு தாழ்ந்தவர்கள் என்பதனை நன்றாகவே மக்களுக்கு உணர்த்தியுள்ளார்கள். மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தை அறியாமல் எப்படி இவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப் பட்டது. இது நம் நாட்டுத் தலைவருக்கு ஏற்பட்ட மாபெரும் வெட்கக்கேடு.
மாடு மேயிகரன் எல்லாம் மந்திரி அனா இப்படித்தான் பேசுவான் ?
சினிமாவில் கமலைப்போல, இந்த அரசியல் நடிகன் நன்றாகவே நடிக்கிறான்…. மலாய் நாடகத்தில் இவனுக்கு ஓரிடம் ஒதுக்கலாம்…
குரங்கு சுடுபவனை பதவி கொடுத்து நாட்காலியில் சும்மா இருப்பானா சேட்டைய ஆரம்பித்துவிட்டான் .
இவன்னெல்லாம் இந்நாட்டின் மந்திரி என்பது விதி . சரியான படிப்பறிவு இல்லாதவனெல்லாம் பார்லிமெண்டில் * குந்திகின்னு இருக்கானுங்க *. இவனெல்லாம் நாட்டின் குப்பை .